Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோ ஒலிம்பிக்ஸில் சதம் அடித்த அமெரிக்கா.. 100 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடம்!

ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 100 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது.

ரியோ ஒலிம்பிக்ஸில் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று 100-வது பதக்கத்தை தொட்டது அமெரிக்கா. பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 35 தங்கம், 33 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கம் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது.

US at the Top, stands with 100 medal

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன் 22 தங்கம், 21 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 20 தங்கம், 16 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கத்துடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி ஒரு வெண்கலப் பதக்கத்துடன் பட்டியலில் 71-வது இடத்தில் உள்ளது.

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை இன்று இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை சந்திக்கிறார். இதில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகிவிட்ட நிலையில், பிவி சிந்து வெற்றி பெற்றால் தங்கப்பதக்கத்தை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பதக்கப்பட்டியலிலும் இந்தியாவிற்கு சிறிது முன்னேற்றம் ஏற்படும்.

Story first published: Friday, August 19, 2016, 17:40 [IST]
Other articles published on Aug 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+