Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோ ஒலிம்பிக் நிறைவு.. எந்த நாடுகள் எத்தனை பதக்கங்கள் வென்றன தெரியுமா?

ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸில் முடிவடைந்த நிலையில் அமெரிக்கா 121 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா 2 பதக்கங்களுடன் 67-வது இடம்பிடித்துள்ளது.

கடந்த 5-ந் தேதி பிரேசிலில் கோலாகலமாக தொடங்கிய ரியோ ஒலிம்பிக்ஸ் நிறைவடைந்துள்ளது. பதக்கப்பட்டியலில் வழக்கம்போல அமெரிக்காவின் ஆதிக்கமே உள்ளது. இந்த ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கங்களின் அடிப்படையில் பட்டியலில் இடம்பிடித்துள்ள நாடுகளை காணலாம். ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்பதற்காக அமெரிக்கா 291 வீராங்கனைகள், 263 வீரர்கள் என மொத்தம் 554 பேரை அனுப்பியது.

Us at Top on Medal Table, India at 67th

அமெரிக்க வீரர்-வீராங்கனைகள் நடத்திய பதக்க வேட்டையில் அமெரிக்கா ரியோ ஒலிம்பிக்ஸில் 121 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதில், 46 தங்கம், 37 வெள்ளி மற்றும் 38 வெண்கலம் என மொத்தம் 121 பதக்கங்கள் அடங்கும்.

27 தங்கம் உட்பட 67 பதக்கங்களை வென்றுள்ள பிரிட்டன் பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரிட்டன் 27 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம் என 67 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. சீனா 26 தங்கம் உட்பட 70 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதில், 26 தங்கம், 18 வெள்ளி மற்றும் 26 வெண்கலம் அடங்கும்

4-வது இடத்தில் ஊக்கமருந்து விவகாரங்களில் பல சிக்கல்களை சந்தித்த ரஷ்யா 4-வது இடதைப் பிடித்துள்ளது. ரஷ்யா 19 தங்கம், 18 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களை வென்றுள்ளது. 42 பதக்கங்களுடன் ஜெர்மனி 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதில், 17 தங்கம், 10 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் அடங்கும்.

Us at Top on Medal Table, India at 67th

இதைத்தொடர்ந்து ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா, இத்தாலி, ஆஸ்திரேலியா அடுத்தடுத்து பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவைப் பெறுத்தவரை பதக்கப்பட்டியலில் 67-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலமும் அடங்கும். பேட்மிண்டனில் பிவி சிந்து வெள்ளிப்பதக்கமும், மல்யுத்தத்தில் சாக்‌ஷி மாலிக் வெண்கலமும் வென்றனர். இந்தியாவிற்கு ரியோ ஒலிம்பிக்ஸில் கிடைத்த இரண்டு பதக்கங்களையும் பெண்களே பெற்றுத் தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ ஒலிம்பிக்ஸில் ஒட்டுமொத்த பதக்கங்களின் அடிப்படையில் பார்க்கும் போது அமெரிக்கா 121 பதக்கங்களுடன் முதலிடமும், சீனா 70-பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், பிரிட்டன் 67-பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. 4-வது இடத்தில் ரஷ்யாவும், 5-வது இடத்தில் ஜெர்மனியும் உள்ளன.

Story first published: Monday, August 22, 2016, 9:52 [IST]
Other articles published on Aug 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+