Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசராமல் ஆடி கானாவை வீழ்த்திய அமெரிக்கா: 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி

ரியோ டி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் அமெரிக்கா அணி , கானா அணியை வீழ்த்தியது.

பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் போட்டியில் இன்று நடந்த "ஜி" பிரிவு லீக் போட்டியில் அமெரிக்கா, கானா அணிகள் மோதின.

சுறுசுறுப்பாக துவங்கிய முதல் பாதியின் முதல் நிமிடத்திலேயே அமெரிக்காவின் டெம்ப்சே, முதல் கோல் அடித்து மிரட்டினார். இதற்கு கானா அணி வீரர்களால் முதல் பாதியில் பதிலடி எதுவும் கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.

USA defeats Ghana 2-1 in World Cup

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் கானா அணியின் ஆண்டிரு ஏய்யூ ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். அசராமல் ஆடிய அமெரிக்க அணிக்கு புரூக்ஸ் உடனடியாக பதிலடி கொடுத்தார்.

எவ்வளவு போராடியும் கானா அணி வீரர்களால் இதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் அமெரிக்கா அணி, கானா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

போட்டியி்ன் 34 ஆவது நொடியில் கோல் அடித்த அமெரிக்காவின் டெம்ப்சே, உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிவேக கோல் அடித்த வீரர்கள் பட்டியலி்ல் 6 ஆவது இடம் பிடித்தார். இப்பட்டியலில் துருக்கியின் ஹாகன் சுகூர் முதலிடத்தில் உள்ளார்.

Story first published: Tuesday, June 17, 2014, 8:55 [IST]
Other articles published on Jun 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+