For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி எல்லாம் ஒரு பெயரா.. உசேன் போல்ட்-க்கு இரட்டை குழந்தைகள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஜமைக்கா: உசேன் போல்ட்டின் இரட்டைக் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகில் தடகள வீரர் ஒருவருக்கு உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கும் என்றால் அது உசைன் போல்ட்-க்கு மட்டும் தான் எனக்கூறலாம்.

உலகின் ஜாம்பாவனாக திகழ்ந்த உசேன் போல்ட், தங்கப் பதக்கங்களையும், பரிசுகளையும் வாரிக் குவித்துள்ளார்.

அடுக்கடுக்கான சாதனை

அடுக்கடுக்கான சாதனை

ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட், ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் 8 முறை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். ஓட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சில காலம் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக தொடர்ந்து 3 ஒலிம்பிக் (2008, 2012, 2016) போட்டிகளில் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார்.

தற்போது என்ன செய்கிறார்

தற்போது என்ன செய்கிறார்

கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த உசேன் போல்ட், தற்போது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். இசை ஆல்பம்களிலும் அவர் பணிபுரிந்து வருகிறார்.

வைரல் புகைப்படம்

வைரல் புகைப்படம்

இந்நிலையில் தந்தையர் தினமான நேற்று, உசேன் போல்ட் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஆச்சரியம் அளித்தார். அதில், தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். அவருக்கு எப்போது குழந்தைகள் பிறந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவர் குழந்தைகளுக்கு வைத்துள்ள பெயர்கள் இணையவாசிகளை கவர்ந்துள்ளது. அதாவது அந்த இரட்டை குழந்தைகளுக்கு 'தண்டர் போல்ட் என்றும் செயின்ட் லியோ போல்ட்' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மூத்த மகள் பெயர்

மூத்த மகள் பெயர்

உசேன் போல்ட் - காசி பென்னெட் தம்பதிக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அக்குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் போல்ட் என வைத்த பெயரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஏனென்றால் உசேன் போல்ட்டுக்கு லைட்னிங் போல்ட் என்ற அடைமொழியும் உண்டு. அதையே தனது மூத்த மகளுக்கு அவர் பெயராகவும் சூட்டினார்.

Story first published: Tuesday, June 22, 2021, 19:02 [IST]
Other articles published on Jun 22, 2021
English summary
Usain Bolt revealed the news of his twin sons birth and their names on Fathers day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+