Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

200 மீ. ஓட்டத்தில் வெற்றி... ரியோ ஒலிம்பிக்கில் 2வது தங்கம்.. மீண்டும் உசைன் போல்ட் “ஹாட்ரிக்”!

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் ஆடவர்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று ஜமைக்காவின் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. எப்போதுமே ஒலிம்பிக்கில் மற்ற போட்டிகளைவிட தடகளப் போட்டிகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம்.

ஜுவா ஹாவேலாஞ்சே மைதானத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகள், ஒலிம்பிக்கின் கடைசி நாளான 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 47 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

உசைன் போல்ட்...

உசைன் போல்ட்...

இவர்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருபவர் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட். காரணம் இவர் கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆடவர் 100 மீ., 200 மீ. ஓட்டம் மற்றும் 4*100 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்று சாதனை படைத்தவர்.

உலக சாதனை...

உலக சாதனை...

மேற்கண்ட 3 போட்டிகளிலும் உலக சாதனையும் உலகின் மின்னல் வேக மனிதராகக் கொண்டாடப்படும் உசைன் போல்ட் வசமே உள்ளது. இதனாலேயே அவர் மீது இம்முறை ரியோ ஒலிம்பிக்கிலும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

100மீ ஓட்டத்தில் தங்கம்...

100மீ ஓட்டத்தில் தங்கம்...

கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் 9.81 விநாடிகளில் இலக்கை அடைந்து அவர் தங்கம் வென்றார். இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் போட்டியில், 100 மீ., ஓட்டத்தில் தொடர்ந்து 3 முறை தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார் உசைன் போல்ட்.

2வது ஹாட்ரிக்...

2வது ஹாட்ரிக்...

இந்நிலையில் தற்போது அவர் 200மீ ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று மீண்டும் தங்கம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில், 200 மீ., ஓட்டத்தில் தொடர்ந்து 3 முறை தங்கம் வென்றவர் என்ற சாதனையும் உசைன் போல்ட்டிற்கு கிடைத்துள்ளது.

8 தங்கப் பதக்கங்கள்...

8 தங்கப் பதக்கங்கள்...

இந்த தங்கப்பதக்கத்துடன் சேர்த்து ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 8 தங்கப் பதக்கங்களை உசேன் போல்ட் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 19, 2016, 10:48 [IST]
Other articles published on Aug 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+