ஒலிம்பிக் கோல்டு மெடலை வைத்து இந்த உசேன் போல்ட் செய்த சில்மிஷம் தெரியுமா?
லண்டன்: ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் லண்டனில் தனது ஹோட்டல் அறையில் வைத்து செய்த ஒரு கசமுசா பற்றி செய்தி வெளியாகியுள்ளது.
ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த கையோடு அவர் லண்டனுக்கு கிளம்பிச் சென்றார்.

லண்டனில் இரவு முழுவதும் பார்களில் குடியுடன் பார்ட்டி. பார்ட்டி முடிந்த பிறகு பெண்களை அழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு செல்கிறார். இந்நிலையில் ஒரு நாள் இரவு அவர் 3 பெண்களை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவர்களை வரிசையாக நிற்க வைத்து தனது ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை அவர்களுக்கு அணிவித்துள்ளார். அவர்களுக்கு பதக்கங்களை அணிவிக்க போல்ட் ஒரு நிபந்தனை விதித்துள்ளார்.
அதாவது அந்த 3 பெண்களும் பதக்கங்களை பெற தங்களின் முன்னழகை போல்ட் மற்றும் அவரது நண்பர்களுக்கு காட்ட வேண்டும். அவர்களும் செய்துள்ளனர். அதில் ஒரு பெண்ணின் முன்னழகை போல்ட் பாராட்ட வேறு செய்தாராம்.


Click it and Unblock the Notifications