Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உசேன் போல்ட் லீலைகளால் கடுப்பான காதலி.. என்ன செய்தார் தெரியுமா?

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக்கில் தங்க பதக்கங்களை அள்ளிய உசேன் போல்ட் காதலியை ஏமாற்றிவிட்டு, பிளே பாய் போல பிற பெண்களுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் மீடியாக்களில் வெளியாகியிருந்தன. இதுகுறித்து அவரது நீண்ட நாள் காதலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ரியோ ஓலிம்பிக்கில் 4x100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை தனது 30வது பிறந்த நாளை கொண்டாடினார்.

Usain Bolt’s girlfriend finally reacts

அந்த கொண்டாட்டத்தின்போது பெண் ஒருவருடன் உசேன் போல்ட், ஆபாச நடனம் ஆடிய காட்சி வெளியானது. இதற்கு மறுநாளே மற்றொரு பெண்ணுடன் படுக்கையில் மிகவும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது. அந்த பெண்ணின் கன்னத்தில் உசேன் போல்ட் முத்தமிடும் காட்சிகளும் உள்ளன.

படுக்கையை பகிர்ந்த அந்த பெண், பெயர் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 20 வயதாகும் கல்லூரி மாணவி ஜேடி துர்தே என தெரியவந்துள்ளது. கல்லூரி படிக்கும் இவர் ஏற்கனவே 2 குழந்தைகளின் தாயாகும். இந்த போட்டோக்களை பெருமைக்காக அந்த பெண்ணே சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளார்.

நாட்டியமாடியதும், படுக்கையை பகிர்ந்ததுமான இவ்விரு பெண்களும் வேறு ஆகும். மேலும், உசேன் போல்ட் 26 வயதாகும் மாடல் அழகி கசி பென்னட் என்பவரை காதலிப்பதாக, அவரின் சகோதரி சமீபத்தில்தான் கூறியிருந்தார். எனவே காதலி தவிர்த்து மேலும் இரு பெண்களுடன் அடுத்தடுத்த நாட்களில் உசேன் போல்ட் உல்லாசமாக இருந்துள்ளது போட்டோக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

இது உலகம் முழுக்க உள்ள உசேன் போல்ட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இதுவரை வாய் திறக்காமல் இருந்து வந்த காதலி, கசி பென்னட் காட்டமாக சோஷியல் மீடியாவில் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கசி பென்னட் இன்ஸ்டாகிராமில் உசேன்போல்ட் பற்றி வெளியாகியுள்ள மீம்களுக்கு லைக் போட்டு தனது மனதிலுள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். இரு பெண்களையும் இரு பிரபல ஷாப்பிங் நிறுவனங்களோடு ஒப்பிட்டு, ஏமாற்று வேலை செய்துள்ளதாக வெளியிடப்பட்ட மீம்ஸ்சுக்கு அவர் லைக் போட்டுள்ளார்.

மேலும், கசி பென்னட் பக்கத்தில் கூட வர முடியாத பெண்ணுடன் ஒரு இரவை கழித்து வாழ்க்கையை வியாபாரமாக்கிவிட்டதாக கூறி உசேன் போல்டுக்கு ஒரு பெண் அனுப்பிய டிவிட்டையும், கசி பென்னட் லைக் செய்துள்ளார்.

இதன் மூலம், உசேன்போல்ட் விஷயத்தில் தனக்கு இருக்கும் அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது பேட்டிக்காக அந்த நாட்டு மீடியாக்கள் காத்திருக்கின்றன.

Story first published: Thursday, August 25, 2016, 16:23 [IST]
Other articles published on Aug 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+