ரியோ லீலைகள்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா- சொல்வது உசேன் போல்ட்டின் அக்கா
கிங்ஸ்டன்: பிரேசிலில் ஒன்றும் நடந்திருக்காது, இது போன்ற புகைப்படங்கள் வருவது எல்லாம் சகஜம் என ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் லீலைகள் பற்றி அவரது அக்கா கிறிஸ்டீன் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகருக்கு சென்ற ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் 20 வயது மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதை அந்த மாணவி புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இது தவிர மேலும் 2 பெண்களுடன் போல்ட் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வேறு வெளியாகியுள்ளன. இத்தனைக்கும் போல்ட்டுக்கு ஜமைக்காவில் கேசி பென்னட் என்ற அழகிய காதலி உள்ளார். அவரை போல்ட் விரைவில் திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போல்ட்டின் லீலைகள் குறித்து அவரது அக்கா கிறிஸ்டீன் போல்ட் ஹில்டன்(32) கூறுகையில்,
போல்ட்டின் புகைப்படங்களை பார்த்து அவரது காதலி கேசி கோபம் அடைவார். உசேன் நாடு திரும்பிய பிறகு கேசியை மணக்க புரபோஸ் பண்ணுவார் என்று நம்புகிறேன். அவர் கேசியை அளவுக்கு அதிகமாக காதலிக்கிறார்.
மக்கள் போல்ட்டுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க விரும்புவார்கள். அவரும் போஸ் கொடுப்பார். பிரேசிலிலும் அப்படி தான் நடந்திருக்கும். வேறு எதுவும் நடந்திருக்காது. இது போன்று போல்ட் படங்கள் வருவதை பார்த்து கேசிக்கு பழக்கமாகிவிட்டது என்றார்.


Click it and Unblock the Notifications