Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்குப் பேருதான் சோசியல் டிஸ்டன்சிங்.. பொட்டில் அடித்தாற் போல சொன்ன போல்ட்

பெங்களூரு: இதுக்குப் பேர்தான் சோசியல் டிஸ்டன்சிங் என்று கூறி ஒரு அருமையான புகைப்படத்தை மின்னல் வேக ஓட்டக்காரர் உசேன் போல்ட் போட்டுள்ளார்.

உலகின் அதி வேக ஓட்டக்காரர் ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட், தடகளப் போட்டிகளில் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்தவர்.

Usain Bolt tweet about Social Distancing

100 மீட்டர் மட்டுமல்லாமல், 200 மட்டர், 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டம் என எல்லாவற்றிலும் உலக சாதனை படைத்தவர் போல்ட். இதுவரை கண்ட தடகள ஓட்டக்காரர்களிலேயே மிகச் சிறந்த ஓட்டக்காரர் என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு.

இந்த நிலையில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அவர் கலந்து கொண்டு தங்கம் வென்ற 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் படத்தைப் போட்டுள்ளார். அதில் சோசியல் டிஸ்டன்சிங்கை கடைப்பிடிப்போம்.. அனைவருக்கும் ஹேப்பி ஈஸ்டர் என்று செய்தி போட்டுள்ளார். இந்த படம் இப்போது பல அர்த்தங்களை நமக்கு கொடுத்துள்ளது.

கொரோனாவின் பிடியில் உலகமே சிக்கித் தவிக்கிறது. இப்போது அனைவருக்கும் வலியுறுத்தப்படுவது சோசியல் டிஸ்டின்சிங் மற்றும் தனித்திருத்தல் தான். இதைத்தான் உசேன் போல்ட் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக் போட்டியில் 9.69 விநாடிகளில் ஓடி வந்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும் 200 மீட்டர் போட்டியிலும் அவரே தங்கம் வென்றார். அந்த போட்டியில் 19.38 விநாடிகளில் அவர் முதலிடத்தைப் பிடித்தார்.

எந்த சீனாவிலிருந்து கொரோனாவைரஸ் கிளம்பி இன்று உலகையே ஆட்டிப் படைக்கிறதோ அதே சீனாவில் தான் படைத்த சாதனைப் படத்தைப் போட்டு உலகுக்கே செய்தி போட்டுள்ளார் உசேன் போல்ட்.

Story first published: Tuesday, April 14, 2020, 14:25 [IST]
Other articles published on Apr 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+