மும்பை: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது வர்ணனை செய்ய பயமாக உள்ளது என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பல கோடி இந்தியர்களை போன்று கிரிக்கெட் ரசிகர் ஆவார். இத்தனை நாட்களாக கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசித்த அவர் தற்போது புதிதாக ஒரு வேலையை செய்யப் போகிறார்.
வரும் 14ம் தேதி உலகக் கோப்பை போட்டிகள் துவங்குகிறது. 15ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகரில் நடக்க உள்ளது. இந்த போட்டியை நினைத்து இந்தியா-பாகிஸ்தான் அணி வீரர்கள் மட்டும் டென்ஷனாக இல்லை அமிதாப் பச்சனும் தான்.

டோணி அன்ட் கோ டென்ஷனாக இருக்க காரணம் பாகிஸ்தானுடன் விளையாட உள்ளது. அமிதாப் டென்ஷனாக காரணம் அவர் தான் அந்த போட்டியின் வர்ணனையாளர். முதல் முறையாக கிரிக்கெட் போட்டிக்ககு வர்ணனை செய்வதால் தான் அமிதாப் பதட்டத்தில் உள்ளார்.
இது குறித்து அமிதாப் கூறுகையில்,
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி வர்ணனை செய்வதை நினைத்து பயமாக உள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் தேவை என்று தெரிவித்துள்ளார்.