For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vinesh Phogat தகுதி நீக்கம் - ஒரே இரவில் எடை கூடியது எப்படி? காரணங்களை கூறும் மருத்துவர்! தவறான ரூல்

பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த விளையாட்டில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்பு நடைபெற்ற எடை சோதனையில் , வினேஷ் போகட் அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததாக கூறி, அவரை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தகுதி நீக்கம் செய்துள்ளது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், 8 மணி நேர இடைவேளையில் 3 போட்டிகளை நடத்திவிட்டு, பின்னர் எடையை சோதிப்பது தவறான முடிவு என்று மருத்துவர் அப்துல்லா விளாசியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய மல்யுத்த வீராங்கனை விக்னேஷ் போகட்
இன்று இந்திய நேரம் நள்ளிரவில் தங்கப் பதக்கம் வெல்வார் என்று நாடே எதிர்பார்த்தது.

Olympics 2024 Vinesh Phogat Paris Olympics 2024 Wrestling 2024 2024

இந்த சூழ்நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இன்று போட்டி நடக்கும் நாள்
காலை அவர் ஐம்பது கிலோ எடைப் பிரிவில் பங்கு பெறுவதால்
சரியாக ஐம்பது கிலோ இருக்க வேண்டும் என்றும் அதை விட சில கிராம்கள் கூடுதலாக இருக்கிறார். அதனால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வருகிறது.

நேற்றைய தினம் பதினாறு பேருக்கான ரவுண்ட் காலிறுதி, அரையிறுதி ஆகிய மூன்று போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று இன்று இறுதிப் போட்டி நடக்க உள்ள சூழ்நிலையில் இவ்வாறு சில கிராம் எடை கூடி போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது உள்ளபடி வருத்தம் அளிக்கிறது.

நூறு கிராம் கூடிய எடையைக் குறைக்க இரவு முழுவதும் செய்த உழைப்பு பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனக்கு இருக்கும் சில கேள்விகள் இது தான் பதினாறு பேருக்கான நாக் அவுட் ரவுண்ட் காலிறுதிப் போட்டி , அரையிறுதிப் போட்டி
ஆகிய மூன்றையும் ஒரே நாளில் அதுவும் எட்டு மணிநேர இடைவேளைக்குள் வைத்திருக்கிறார்கள்.

இதை போட்டி நடத்தும் கமிட்டி ஆராய்ந்து ஒரே நாளில் முக்கியமான நாக் அவுட் மூன்று போட்டிகளை அதிலும் மல்யுத்தம் போன்ற அதிக உழைப்பைக் கோரும் போட்டியை நடத்த முடியுமா?
ஆனால் அதையும் மீறி அனைத்திலும் வெற்றி பெற்ற பெண்மணி ஒருவர் அதிலும் இதுவரை சர்வதேச போட்டிகளில் தோற்காத முடிசூடா ராணியாக இருந்த யூய் சசாகி எனும் சாம்பியன் வீராங்கனையைத் தோற்கடித்ததும் குறிப்பிடத்தக்கது.

கடுமையான உடல் உழைப்பை வழங்கியதால்
உணவு மற்றும் திரவ/ தாதுஉப்பு உட்கொள்ளல் ஆகியவற்றை சராசரி நபரை விட உடல் கோருவதால் சற்று அதிகமாக உட்கொண்டிருக்கலாம். அதீத உடல் உழைப்புக்கு பின் உடலின் எலும்பு போர்த்திய தசைகள் மாவுச்சத்தைக் கோரும்.

இவ்வாறு மாவுச்சத்தை உட்கொள்ளும் போது அது இன்சுலின் சுரப்பைத் தூண்டும். இன்சுலின் சுரப்பு தூண்டப்படும் போது நமது சிறுநீரகங்கள் சோடியம் உப்பை சற்று அதிகமாக உள்ளே சேமிக்கும். சோடியம் சேமிக்கப்படும் போது கூடவே நீரும் உடலில் சேமிக்கப்படும்.
இவ்வாறு அவரது உடலில் நீர் சற்று அதிகமாக சேர்ந்து அது நூறு கிராம் எடை கூடுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் இத்தகைய உடல் அயர்ச்சி நிலைக்கு முந்தைய நாள் மூன்று முக்கிய போட்டிகளை ஒரே நாளில் எட்டு மணிநேர இடைவெளிக்குள் தொடர்ந்து விளையாடப் பணிக்கப்பட்டது காரணமாக இருக்கலாம்.
போட்டியின் விதிமுறை என்பது விதிமுறை தான்.இப்போது நாம் புலம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை எனினும் மனம் கவலை கொள்வதைத் தடுக்க முடியவில்லை. சகோதரி விக்னேஷ் போகட்டுக்கு இன்னும் வலிமை சேரட்டும்
அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கக் கனவு நிறைவேறட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, August 7, 2024, 13:29 [IST]
Other articles published on Aug 7, 2024
English summary
Vinesh Phogat disqualifcation - Doctor reveals How Body Weight increases despite training Vinesh Phogat தகுதி நீககம் - ஒரே இரவில் எடை கூடியது எப்படி? காரணங்களை கூறும் மருத்துவர்! தவறான ரூல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+