பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிச்சுற்றில் வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்டதை விட 100 கிராம் அதிகமாக எடை இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் வினேஷ் போகத்துக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் அவர் நாடு திரும்பினார்.
இந்த நிலையில் எடை குறையாமல் இருந்தது எவ்வாறு என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்குப் பின்னால் சதி இருக்கிறது என்று பலரும் விமர்சித்து உள்ளனர். தற்போது சர்வதேச விளையாட்டு துறைக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இதில் வினேஷ் போகத்துக்கு வெள்ளி கிடைக்குமா கிடைக்காதா? என்பது ஆகஸ்ட் 13ஆம் தேதி தெரியவரும். இந்த நிலையில் தினேஷ் போதத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டிய இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவரான பிடி உஷா தற்போது அவருக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை போன்ற விளையாட்டில் எடையை நிர்வகிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். இதில் சம்பந்தப்பட்ட வீரர்கள் இல்லை அவர்களுடைய பயிற்சியாளர்கள் மட்டுமே கவனம் செலுத்தி இருக்க வேண்டுமே தவிர இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தால் நியமிக்கப்பட்டுள்ள தலைமை மருத்துவ அதிகாரி கிடையாது.
நாங்கள் வைத்திருக்கும் மருத்துவ குழு ஏதேனும் வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர்கள் மருத்துவர் இல்லை என்றால் எங்கள் குழு அவர்களை கண்காணித்து உதவி செய்யும். மேலும் வீரர்கள் காயமடைந்தால் அவர்களை எவ்வாறு மீண்டும் தகுதி பெற வைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கொடுக்கும்.
ஆனால் இது தெரியாமல் இந்திய ஒலிம்பிக் சம்மேளன மருத்துவக் குழு மீது அனைவரும் குற்றம் சாட்டுவதை என்னால் ஏற்க முடியாது.
இதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் குழுவை பற்றி முடிவு எடுப்பதற்கு முன் அனைத்து விஷயங்களையும் ஆராயுமாறு பிடி உஷா தெரிவித்துள்ளார். வினேஷ் போகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ள நிலையில் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவரான பிடி உஷாவே வீரர்கள் தான் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி இருப்பது இந்த வழக்கில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் வினேஷ் போகத் பதக்கம் வாங்குவதை இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் விரும்பவில்லையா என்று தற்போது ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.