For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vinesh Phogat-இப்படி நடக்கும் என முன்பே தெரியும்!அதுக்காகவே ஸ்பெஷல் ஏற்பாட்டு உடன் வந்த வினேஷ் போகத்

ஒலிம்பிக் 2024 : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிச்சுற்றில் வினேஷ் போகத் தகுதி பெற்று இருந்தார். இதனால் வெள்ளி அல்லது தங்கம் கிடைக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் எடை பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுக்கு பின்னால் சதி இருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டுத்துறைக்கான தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

Olympics 2024 Vinesh Phogat Paris Olympics 2024 Wrestling 2024

இந்த நிலையில் வினேஷ் போகத்துக்கும் மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் அப்போதைய பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்கிற்கும் பிரச்சனை ஏற்பட்டது. பிரிஜ் பூஷன் மல்யுத்த பயிற்சிக்காக வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வினேஷ் போகத் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் வினேஷ் போகத் பலரின் எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்தது. இந்த நிலையில் தாம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க கூடாது என்பதற்காக பிரிஜ் பூஷன் சிங் பல குறுக்கு வழிகளை கையாள்வார் என தெரிந்து கொண்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக விளையாட்டுத்துறையில் ஒரு வீரரை பழிவாங்க வேண்டும் என்றால் அவருக்கு தெரியாமலேயே ஊக்க மருந்தை கலந்து கொடுத்து விட்டு அவரை பரிசோதனையில் சிக்கி வைக்க முடியும்.

இப்படி பல வீராங்கனைகள் மாட்டியிருக்கிறார்கள். இதுகுறித்து வினேஷ் போகத் ஏற்கனவே சர்வதேச சம்மேளனத் தலைவரிடம் முறையிட்டு இருந்தார். மேலும் தம்மை யாரும் எந்த விஷயத்திலும் சிக்க வைத்து விடக்கூடாது என்பதற்காக மல்யுத்த சம்மேளனம் அனுப்பும் பயிற்சியாளர்களை வினேஷ் போகத் நம்பவில்லை.

இதற்காக வினேஷ் போகத் தன்னுடைய சொந்த செலவில் பயிற்சியாளர் மற்றும் மருத்துவ குழுவினரை பாரிசுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஊக்க மருந்தை நம் தமக்குத் தெரியாமல் கலந்து கொடுத்து விடுவார்கள் வினேஷ் விழிப்புணர்வுடன் இருந்த போதும், உடல் எடையில் 100 கிராம் அதிகமாகி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் வினேஷ் போகத் அழைத்து வந்த நபர்களை அவரது முதுகில் குத்தினார்கள். இல்லை வேறு ஏதேனும் நடந்திருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Tuesday, August 13, 2024, 16:28 [IST]
Other articles published on Aug 13, 2024
English summary
Vinesh Phogat hired Personal coach and Daughters to Paris as She lose conffidence
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+