For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vinesh Phogat வெற்றி! பிரிஜ் பூஷனுக்கு விழுந்த அறை.. மாமா மஹாவீர் தடாலடி.. ஷாக்சி மாலிக் உருக்கம்

Vinesh Phogat : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதன் மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்து இருக்கிறார். இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டாக பல விமர்சனங்கள் நெருக்கடிகளை சமாளித்து வந்த வினேஷ் போகட்டுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது.

மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் அப்போதைய பாஜக எம்பியுமான பிரிஜ் புஷன் வீராங்கனைகளிடம் அத்துமீறி நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டி வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Olympics 2024 vinesh phogat Wrestling

அப்போது பல்வேறு இன்னல்களை வினேஷ் போகட் சந்தித்தார். இந்த நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று ஒலிம்பிக்கில் தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் வாய்ப்பை வினேஷ் உறுதி செய்து இருக்கிறார். இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள வினேஷ் போகட்தின் மாமாவும் பிரபல மல்யுத்த ஆசானுமான மகாவீர் போகட், வினேஷ் போகட்டின் இந்த வெற்றி பிரிஜ் பூஷன் சிங் கன்னத்தில் விழுந்த அடி என்று கூறியிருக்கிறார்.

பல தடைகளைக் கடந்து வினேஷ் போகட் தற்போது சாதித்திருப்பதாகவும், ஒலிம்பிக் தங்கத்துடன் தங்களுடைய கிராமத்திற்கு அவர் திரும்புவார் என்றும் மகாவீர் போகட் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள வினேஷ் போகட் உடன் போராட்டத்தில் ஈடுபட்ட சக வீரரான பஜ்ரங் பூனியா,நாங்கள் போராட்டத்தை நடத்தியதை கொச்சைப்படுத்தி பாஜகவின் ஐடி செல் உறுப்பினர்கள் பேசினார்கள்.

எதிர்க்கட்சியின் தூண்டுதலால் நாங்கள் போராடினோம் என்று கூறினார்கள். நாங்கள் வென்ற பதக்கங்கள் 15 ரூபாய்க்கு கூட தேறாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள். மேலும் எங்களை ஜாதி ரீதியாக பிரித்து பேசினார்கள். தற்போது, எங்கள் வினேஷ் போகட் பதக்கத்தை வென்று இருக்கிறார். எங்களை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் வினேஷ் போகட்டுக்கு பாராட்டை தெரிவிப்பார்களா?

நாங்கள் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றெல்லாம் எங்கள் மீது பழி சுமத்தினார்கள். எங்கள் மீது பாஜக ஐடி செல் உறுப்பினர்கள், பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஆனால் தற்போது வினேஷ் போகட் தான் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை ஆவார். அவருடைய சாதனைகளில் ஒலிம்பிக் பதக்கம் மட்டும்தான் இல்லாமல் இருந்தது.

தற்போது அவர் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வென்று வருவார்.அது பாஜகவின் ஐடி செல்லுக்கும் பிரிஜ் பூசனுக்கும் விழுந்த அடியாக தான் நான் பார்க்கிறேன். நாங்கள் வெற்றி பெற்று வந்த பிறகு அவர்கள் எப்படி எங்கள் கண்களைப் பார்த்து பேசுவார்கள் என்றும் பஜ்ரங் பூனியா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய சாக்ஷி மாலிக், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற என்னுடைய கனவை வினேஷ் போகட் நிறைவேற்றி இருப்பதாக பாராட்டியுள்ளார்.

Story first published: Wednesday, August 7, 2024, 8:00 [IST]
Other articles published on Aug 7, 2024
English summary
Vinesh Phogat in olympics 2024- Uncle Mahavir - Bajrang Punia slams Brij Bhusan and BJP Vinesh Phogat வெற்றி! பிரிஜ் பூஷனுக்கு விழுந்த அறை.. மாமா மஹாவீர் தடாலடி.. ஷாக்சி மாலிக் உருக்கம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+