Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Vinesh phogat மீது பழிவாங்கும் நடவடிக்கை? ஊக்க மருந்து சோதனை குறித்து நோட்டீஸ்

மும்பை : பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்கவில்லை என கூறிழ் அவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான தேசிய ஊக்க மருந்து தடுப்பு சோதனை மையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

வினேஷ் போகத் கடந்த ஆண்டு அப்போதைய பாஜகவின் எம் பி யும் மல்யுத்த சமயநலத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

vinesh phogat dope test congress

அப்போது வினேஷ் போகத் மீது கடும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டது. இதையெல்லாம் மீறி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்று அபாரமாக செயல்பட்டார். இறுதிப்போட்டியில் தகுதி பெற்ற வினேஷ் போக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் எடை இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அவருக்கு பறிபோனது. இதனை எதிர்த்து சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் சர்வதேச விளையாட்டு துறைக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதிலும் வினேஷ் போகத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார்.

தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த வினேஷ், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜுலான் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக வேட்பாளர்களை எதிர்த்து வினேஷ் போகத் களமிறங்கி இருக்கிறார். வினேஷ் போகத்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வினேஷ் போகத் கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்கவில்லை.

இதனால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் அவருக்கு நோட்டீஸ் வழங்கி இருக்கிறது. எனினும் ஒரு ஆண்டில் மூன்று முறைக்கு மேல் ஊக்க மருந்து தடுப்பு சோதனை பங்கேற்காமல் இருந்தால் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வினேஷ் போக தற்போது தான் முதல் முறை அந்த சோதனையில் பங்கேற்கவில்லை.

இதற்கு காரணம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் தற்போது அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வினேஷ் போகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் விதமாக அவருக்கு இவ்வாறு சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Story first published: Thursday, September 26, 2024, 0:00 [IST]
Other articles published on Sep 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+