வினேஷ் போகத் மீதும் தவறு இருக்கிறது..அவர் பழியை ஏற்று கொள்ள வேண்டும்! பாஜகவின் சாய்னா நேவால் கருத்து
Vinesh Phogat : பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்ற பிறகு எடைப் பரிசோதனையில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வியை தழுவினார். இதன் மூலம் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு எந்த ஒரு பதக்கமும் வாங்காமல் தாயகம் திரும்புகிறார்.
இந்த நிலையில் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தேசமும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ஐடி விங்கினர் வினேஷ் போகத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும், அண்மையில் பாஜகவில் இணைந்த சாய்னா நேவாலும் அதிர்ச்சிகரமான ஒரு கருத்தை கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் நான் கடந்த இரண்டு நாட்களாக வினேஷ் போகத்துக்கு ஆதரவாக கடந்த இருந்தேன். பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இந்த நொடிக்காக தான் ஒவ்வொரு வீரர்களும் தயாராகி இருப்பார்கள்.
தற்போது வினேஷ் போகத் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று எனக்கு நன்றாகவே தெரியும். வினேஷ் போகத்தின் நிலையை விவரிக்க தற்போது வார்த்தையே இல்லை. வினேஷ் போகத் ஒரு போராளி. நிச்சயம் அவர் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவார். அடுத்த முறை நிச்சயமாக பதக்கத்தை வெல்வார் என்று நம்புகிறேன். ஆனால் வினேஷ் போகத் ஒரு அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார்.
அவருக்கு எது சரி?எது தவறு என்று நன்றாகவே தெரியும். எனக்கு மல்யுத்தத்தில் என்ன நடக்கும் என்பதெல்லாம் தெரியாது. ஒலிம்பிக் கமிட்டி இடம் இது குறித்து மேல்முறையீடு செய்ய முடியுமா என்றும் எனக்கு தெரியாது. ஆனால் விதிகள் என்ன என்று வினோஷ் போகத்துக்கு நன்றாகவே தெரியும். அவர் என்ன தவறு செய்தார் என்றும் எனக்கு தெரியவில்லை. அவர் எப்போதும் நன்றாக உழைக்கும் வீராங்கனையாக தான் நான் அறிவேன்.
ஆனால் இப்படிப்பட்ட ஒரு தவறு நடந்திருக்க கூடாது. இது போன்ற வீராங்கனைகள் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் இந்த தவறை செய்திருக்கக் கூடாது. இது எப்படி நடந்தது என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. தினேஷ் போகத்துக்கு துணையாக பெரிய ஒரு குழுவே இருக்கிறது. அவருக்கு நிறைய பயிற்சியாளர்கள் பிசியோஸ் என பலரும் இருக்கிறார்கள். இது அவருக்கு முதல் ஒலிம்பிக் கிடையாது.
தனது மூன்றாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இருக்கிறார். அப்படி இருக்கும்போது விதிகள் நிச்சயம் தெரிந்திருக்கும். என்னைக் கேட்டால் வினேஷ் போகட்டும் மீதும் தவறு இருக்கிறது. மற்றவர்கள் மீது பழி சுமத்துவதை விட வினேஷ் போகட்டும் இந்த பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு பெரிய போட்டிக்கு முன்பு இந்த தவறை அவர் செய்திருக்கக் கூடாது. ஆசிய போட்டி,காமன்வெல்த் போட்டி என அனைத்திலும் சாம்பியனாக இருக்கும் வீராங்கனைக்கு இது கூட தெரியாதா?
எனவே வினேஷ் மீதும் தவறு இருக்கின்றது. வினேஷ் போகத் எடை அதிகரித்து இருக்கிறது என்று ஏன் யாரும் அவரை எச்சரிக்கை செய்யவில்லை. இதற்கு வினேஷ் போகத் அல்லது அவருடைய பயிற்சியாளர் தான் பதில் சொல்ல வேண்டும்.நமக்கு ஒரு பதக்கம் போய்விட்டதே என்ற ஏமாற்றம்தான் எனக்கு அதிகமாக இருக்கிறது என சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications