Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது எப்படி இருக்கு... ஹர்திக்கை தொடர்ந்து ப்ளை புஷ்-அப் எடுத்த விராட் கோலி

மும்பை: கடந்த வாரத்தில் ப்ளை புஷ்-அப்ஸ் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா.

இந்நிலையில் தற்போது கேப்டன் விராட் கோலியும் ப்ளை புஷ்-அப்ஸ் எடுத்து எடுத்து வீடியோவை பதிவிட்டுள்ளார். ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் செய்துள்ளார் விராட் கோலி.

ஹர்திக் பாண்டியா கைகளை பயன்படுத்தி ப்ளை புஷ்-அப்ஸ் எடுத்திருந்த நிலையில், தற்போது விராட் கோலி, கைகளை தட்டி அதை மேம்படுத்தியுள்ளார்.

வீட்டிலேயே பிட்னஸ் பயிற்சி

வீட்டிலேயே பிட்னஸ் பயிற்சி

கேப்டன் விராட் கோலி எப்போதுமே தன்னுடைய பிட்னசில் அக்கறை கொண்டவர். கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியிருந்தாலும், தன்னுடைய பிட்னசை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் வீட்டில் உள்ள ஜிம்மிலேயே தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு அதை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார்.

டீ வில்லியர்ஸ் பாராட்டு

டீ வில்லியர்ஸ் பாராட்டு

கடந்த மே மாதத்தில் 180 லாண்டிங்ஸ் பயிற்சியை மேற்கொண்டு அதையும் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார் விராட். இத்தகைய தொடர் வீடியோக்கள் மற்ற சக வீரர்களுக்கும் உந்துதலாக இருக்கிறது. தென்னாப்பிரிக்க கேப்டன் ஏபி டீ வில்லியர்சும் இதுகுறித்த தன்னுடைய ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

இதேபோல இந்திய வீரர்களில் ஹர்திக் பாண்டியா, தொடர் பயிற்சிகள் மூலம் தன்னுடைய பிட்னசை பிட்டாக வைத்துக் கொள்பவர். கடந்த வாரத்தில் அவர் ப்ளை புஷ்-அப்ஸ் எடுத்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். அதற்கு சிறப்பான வரவேற்பும் காணப்பட்டது. ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் ஏராளமாக அளித்திருந்தனர்.

ட்விஸ்டுடன் செய்த விராட்

ட்விஸ்டுடன் செய்த விராட்

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இந்த ப்ளை புஷ் அப்சை தானும் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கேப்டன் விராட் கோலி. அதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், பாண்டியா கைகளை பயன்படுத்தி செய்த நிலையில், விராட் கோலி, அதனிடையே, கைகளையும் தட்டி சிறப்பாக செய்திருந்தார். மேலும் ஹர்திக்கின் ப்ளை புஷ் அப்ஸ் தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும் அவர் தன்னுடைய கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, July 3, 2020, 7:39 [IST]
Other articles published on Jul 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+