Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இல்லம்மா... நான் சூப்பரா இருக்கேன்... அம்மாவை சமாதானப்படுத்திய விராட் கோலி

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்களில் தன்னுடைய பிட்னசில் மிகுந்த அக்கறை கொண்டவர் கேப்டன் விராட் கோலி. கொரோனா காலத்திலும் பிட்னசில் மிகுந்த கவனம் கொண்டு வீட்டிலேயே பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Recommended Video

CSK Planning to start early practice for IPL 2020

பிட்னஸ் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டதால் தான் ஒல்லியாக இருந்ததாகவும், இதனால் தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய தாய் வருத்தம் தெரிவித்ததாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்துவது தனக்கு மிகுந்த சிரமமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வீரர் மயங்க் அகர்வாலுடன் விராட் கோலி மேற்கொண்ட கலந்துரையாடலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில்தான் கோலி இவ்வாறு கூறியுள்ளார்.

விராட் -மயங்க் கலந்துரையாடல்

விராட் -மயங்க் கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள வீரர்களை கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து ரசிகர்களை குஷி செய்து வருகின்றன டிவிட்டர் உள்ளிட்ட தளங்கள். இதேபோல மயங்க் அகர்வால் மற்றும் விராட் கோலி இருவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அம்மாவின் கருத்து

அம்மாவின் கருத்து

இதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட விராட் கோலி, தன்னுடைய அம்மா குறித்தும் சில விஷயங்களை ஷேர் செய்தார். தான் தொடர்ந்து பிட்னஸ் பயிற்சிகளில் ஈடுபட்டதால் ஒல்லியாக காணப்பட்டதாகவும், அதனால் தான் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக தன்னுடைய தாய் கருதியதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமாதானம் ஆகாத அம்மா

சமாதானம் ஆகாத அம்மா

தான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், தன்னுடைய விளையாட்டிற்காக தான் இத்தகைய பிட்னஸ் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவரை சமாதானப்படுத்துவது தனக்கு மிகவும் சிரமமாக இருந்ததாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். தன்னுடைய மகன் கொழுகொழுவென இல்லையென்றால், நோய்வாய் பட்டுள்ளதாக அனைத்து அம்மாக்களும் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விராட் கோலி மலரும் நினைவுகள்

விராட் கோலி மலரும் நினைவுகள்

முதல் நாள் தான் சமாதானப்படுத்தினாலும், அடுத்த நாள் மீண்டும், நீ உடல்நலக் குறைவாக இருப்பதாக தன்னுடைய அம்மா தொடர்ந்து கூறுவார் என்றும், அதுவெல்லாம் மிகச்சிறந்த நாட்கள் என்றும் விராட் கோலி தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் தங்களுடைய வீடுகளில் அடைந்துள்ள கிரிக்கெட் வீரர்கள், வரும் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

Story first published: Saturday, July 25, 2020, 7:29 [IST]
Other articles published on Jul 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+