இது வெறும் தொடக்கம் தான்.. விஸ்வநாதன் ஆனந்த் சொன்ன அல்டிமேட் தகவல்.. ஷங்கர் படத்தை மிஞ்சிய செஸ் செட்
சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் கோலாகலமாக தொடங்ககிறது. இதற்கான பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Recommended Video
உலகம் முழுவதுலிருமிருந்து வீரர்கள் , வீராங்கனைகள் சென்னை வந்தடைந்தனர். இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த இன்று ஏந்தி வந்தார்.
அப்போது பொதுமக்கள் விஸ்வநாதன் ஆனந்த்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

தொடக்க புள்ளி
அதில் பேசிய விஸ்வநாதன், இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் செஸ் சாம்பியன்களிடம் நீங்கள் கேட்டால், அவர்கள் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தான் காரணம் என்பார்கள். இது வரை செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே இப்படி ஒரு தொடர் நடைபெற்றது இல்லை.

சவாலான தொடர்
சென்னையில் இந்த தொடர் சிறப்பாக நடைபெற் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். நிச்சயம் இந்தப் போட்டிகள் கெடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கார்ல்சென் கூறி இருக்கிறார். அவரது கருத்தை நான் வழிமொழிகிறேன்.

மறக்க முடியாத அனுபவம்
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி வந்ததை நான் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். அப்படி ஒரு அனுபவத்தை இது தந்துள்ளது. சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ள அரசுக்கு நன்றி. இந்திய அணி வீரர், வீராங்கனைகளிடம் இன்று சந்தித்து பேச இருக்கிறேன் என்று விஸ்வநாதன் ஆனந்த் கூறினார்.
மாணவர்கள் சாதனை
இதனிடையே, சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பிரம்மாண்ட செஸ் போர்ட் அமைக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் செஸ்சில் இருக்கும் காய்கள் போல் வேடமணிந்து , அந்த ராட்சத போர்டில் விளையாடினார்கள். இது ஷங்கர் படங்களில் வரும் பிரம்மாண்ட செட்களை மிஞ்சும் அளவுக்கு மாணவர்களின் முயற்சிகள் இருந்தது.


Click it and Unblock the Notifications