சென்னை : இது தோல்வியே கிடையாது வெற்றி தான் என்று பிரக்ஞானந்தாவை ஐந்து முறை உலக சாம்பியன் ஆன தமிழக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டி இருக்கிறார். கடந்த 20 நாட்களுக்கு மேலாக உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் 64 வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரில் பிரக்ஞானந்தா உலகின் முன்னணி வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தி இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.

இந்த நிலையில் 18 வயதில் உலக கோப்பையை பிரக்ஞானந்தா வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. டை பிரேக்கர் வரை சென்ற இந்த போட்டியில் சிறிய சரிவு மூலம் பிரக்ஞானந்தா கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை தவற விட்டார். இதன் மூலம் 32 வயதான கார்ல்சன் வெற்றி பெற்றார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை கார்ல்சன் வென்று இருக்கிறார்.
அவர் உலகின் பல்வேறு தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்றாலும் உலக கோப்பையை மட்டும் அவரால் வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் இந்தத் தொடரிலும் சிறப்பாக விளையாடிய கார்ல்சன் தனது முதல் உலகக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் தமிழக செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில், இறுதியாக மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.
அவருடைய கடின உழைப்பிற்கும் தீவிர முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாக இந்த தொடர் அமைந்துள்ளது. இந்த ஒரு தொடரில் மட்டும் தான் அவர் கால் பதிக்காமல் இருந்தார். தற்போது அதிலும் வென்று இருக்கிறார். உலகக் கோப்பையை வென்ற கார்ல்சனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார்.இதேபோன்று பிரக்ஞானந்தாவுக்கு இது தோல்வி இல்லை. அவர் மீண்டும் கேண்டிடேட்ஸ் தொடரில் களமிறங்கி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
அது மிகவும் பிரமாதமான முடிவாக இருக்கும் என்று விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார். இதேபோன்று பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில் பல மகிழ்ச்சி தக்க நினைவுகளை பிரக்ஞானந்தா சேகரித்து இருப்பார். நிச்சயம் இந்த தோல்வியிலிருந்து அவர் பாடம் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.