Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கூட விளையாடியவங்கெல்லாம் கோச்சாயிட்டாங்க.. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம்.. விஷ்வாஸ் நம்பிக்கை!

டெல்லி: கடந்த 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் விஷ்வாஸ் மீண்டும் களமிறங்கியுள்ளார். அப்போது கூட விளையாடவர்கள் எல்லாம் கோச்சாயிட்ட நிலையில், இவர் மீண்டும் பதக்கம் வெல்லும் இலக்குடன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதில் வில்வித்தை ஆடவர் ரிகர்வ் குழுவில் இடம்பெற்றுள்ளார் 33 வயதாகும் ராணுவ வீரர் விஷ்வாஸ்.

Viswash targets second medal after 12 years

இளம் வீரர்கள் அடானு தாஸ், சுக்சயின் சிங், ஜகதீஸ் சவுத்ரி ஆகியோர் அடங்கிய ரிகர்வ் குழுவில் விஷ்வாஸ்தான் வயதில் மூத்தவர்.

2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது. அப்போது விஷ்வாஸ் உடன் அணியில் இடம்பெற்றிருந்த சவாயான் மாஜிதான் தற்போது, அணியின் கோச்.

1997ல் வில்வித்தை பிரிவில் களமிறங்கிய விஷ்வாஸ், முன்னாள் வீரர்களான லிம்பா ராம், சத்யதேவ் பிரசாத் மாஜி ஆகியோருடன் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

ஆடவர் ரிகர்வ் குழுவுக்கான தேர்வில் பல இளம் வீரர்கள் பங்கேற்றாலும், தகுதியுள்ளவர்கள் கிடைக்காத நிலையில், அவர்களைவிட சிறப்பாக செயல்பட்டார் விஷ்வாஸ். அதனடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போதிய இளம் வீரர்கள் இல்லாததால், இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு போட்டியில் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

Story first published: Thursday, August 16, 2018, 16:04 [IST]
Other articles published on Aug 16, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+