Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிகினி vs பர்தா.. வைரலாகும் ஒலிம்பிக் மகளி்ர் பீச் வாலிபால் 'கலாசார மோதல்'!

ரியோ டி ஜெனிரோ: பிகினி அணிந்துதான் பீச் வாலிபால் ஆட வேண்டும் என்ற நிலையை மாற்றி பர்தா அணிந்தும் ஆடலாம் என காண்பித்தது எகிப்து பெண்கள் அணி. எதிரில் பிகினியுடன் ஜெர்மனி வீராங்கனைகள் நிற்க, எகிப்து பெண்கள் அணியோ பர்தாவுடன் ஆடியது. இதை ஒரு கலாசார மோதல் என்பதா, அல்லது, கலாசாரா வேறுபாடுகளை ஒலிம்பிக் இணைத்தது என்பதா?

இத்தனை காலமாக, பீச் வாலிபாலை பொறுத்தளவில், விளையாட்டைவிட பெண்களின் ஆடையை குறைப்பதில்தான் அதிக கவனம் செலுத்தப்பட்டு வந்தது. 2012 ஒலிம்பிற்கு முன்புவரை, பீச் வாலிபால் வீராங்கனைகள் இருப்பில் இருந்து, அதிகபட்சமாக 7 செ.மீ நீளத்திற்கு குட்டி ஆடைதான் (உள்ளாடை மாதிரிதான்) அணிய வேண்டும் என ஸ்டிரிக்ட் விதிமுறை இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. டெக்னிக்கல் விஷயங்களைவிட பெண்களை கவர்ச்சி பாவையாக காட்டுவதில் ஒலிம்பிக் நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக அது குற்றம்சாட்டியிருந்தது.

Volleyball in a hijab: Rio Olympics magic

இதனால் 2012க்கு பிறகு பீச் வாலிபால் வீராங்கனைகளுக்கு ஆடை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான வீராங்கனைகள் பிகினியில்தான் ஆடுகிறார்கள்.

ஆனால் முழுக்க பர்தா அணிந்தபடி வாலிபால் ஆட எகிப்து வீராங்கனைகள் இம்முறை கோரிக்கைவிடுத்தனர். கடைசி நிமிடத்தில் இதற்கு அனுமதியும் கிடைத்தது. இந்த போட்டியைத்தான் கலாசார மோதல் என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள். இப்போட்டோ வைரலாகியது.

எகிப்தின் தோவா எல்கோபஷி காதோடு சேர்த்து தலையை மூடும் அளவுக்கு பர்தா அணிந்தார். அவரின் பார்ட்னர் நடா மேவாத், தலை பகுதியை மறைக்காத பர்தா அணிந்திருந்தார். தோவா எல்கோபஷி கூறுகையில், பர்தா அணிவதால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் இல்லை. அதில் வாலிபாலும் ஒன்று என்றார்.

Story first published: Monday, August 22, 2016, 13:10 [IST]
Other articles published on Aug 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+