வாசிம் அக்ரம் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.. காயமின்றி உயிர் தப்பினார்!
கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சளருமான வாசிம் அக்ரமின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நிவுகிறது. இந்த சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
வாசிம் அக்ரம் கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்துக்கு பயிற்சி அளிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.

அப்போது வாசிம் அக்ரமின் காரை ஒட்டி மற்றொரு கார் ஒன்று வந்து இடித்துச் சென்றது. பின்னர் நின்ற காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் திடீரென வாசிம் அக்ரம் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி வாசிம் அக்ரம் தப்பினார். எதற்காக இந்த தாக்குதல் நடைபெற்றது என்று தெரியவில்லை.
காரின் அடையாள எண்ணை குறித்து வைத்துள்ளதாகவும் அதை போலீசாரிடம் தெரிவித்துள்ளேன் என்றும் உள்ளூர் ஊடகங்களுக்கு வாசிம் அக்ரம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி கேமிரா மூலம் கார் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் நடத்தியவரை விரைவில் கண்டுபிடிப்போம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது திட்டமிட்டு வாசிம் அக்ரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், வேறு ஒருவருக்கு குறி வைத்து, அதில் வாசிம் அக்ரம் சிக்கிக் கொண்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
Story first published: Wednesday, August 5, 2015, 20:52 [IST]
Other articles published on Aug 5, 2015


Click it and Unblock the Notifications