செல்ஃபி
இதையடுத்து ஷோபா டே, தனது டிவிட்டர் ஹேண்டிலில் காட்டமாக ஒரு கருத்தை வெளியிட்டார். ஒலிம்பிக்கில் இந்திய அணியின் குறிக்கோள், ரியோ போவது, செல்ஃபி எடுப்பது என்றெல்லாம் கூறிய ஷோபா, சுத்த வீண் செலவு எனவும் சாடியுள்ளார்.
பதிலடி
இதற்கு டிவிட்டரில் பதிலடிகளும் உடனே கிடைத்து வருகிறது. பேட்மின்டனுக்கான, இந்தியாவின் ஒலிம்பிக் வீராங்கனை கட்டா ஜவ்லா, உங்களை போன்றோர் நடவடிக்கைகளில் மாற்றம் வரும்போது இந்த நிலைமை மாறலாம் என பதிலடி கொடுத்துள்ளார்.
சாணம் அள்ளும் போட்டி
இன்னொரு வலைவாசி குறிப்பிடுகையில், ஒலிம்பிக்கில் நீங்கள் தங்கம் வெல்லலாம். ஆனால், நாள் முழுக்க மாட்டு சாணத்தை அள்ளும் விளையாட்டை ஒலிம்பிக்கில் இன்னும் சேர்க்கவில்லை.. என கேலி செய்துள்ளார்.

கண்டபடி வசை
சில சமூக வலைத்தளவாசிகளோ, ஷோபா டேயை எவ்வளவு ஆபாசமாக திட்டமுடியுமோ அவ்வளவு திட்டி தங்களது கோபத்தை கொப்பளித்துள்ளனர்.

ஆதங்கம்
எது எப்படியோ, ஒலிம்பிக்கில் இந்திய அணி வீரர்கள் சோபிக்கவில்லை என்ற ஆதங்கம் பெருவாரியான ரசிகர்களுக்கு உள்ளதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications











