Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லோரும் மன்னிச்சுருங்க.. வேதனையுடன் மன்னிப்பு கேட்ட வேயன் ரூனி!

லண்டன்: உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் மோசமான முறையில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து வெளியேறியதற்காக மன்னித்து விடுமாறு அந்த அணியின் சூப்பர் ஸ்டார் வீரர் வேயன் ரூனி பேஸ்புக் மூலமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அடுத்தடுத்து 2 தொடர் தோல்வியோடு இங்கிலாந்தின் கதவு சாத்தப்பட்டு விட்டது. இந்த உலகக் கோப்பையின் ஒரே ஆறுதல் ரூனி போட்ட முதல் உலகக் கோப்பை கோல் மட்டுமே. ஆனால் அந்தக் கோல் அணிக்கு எந்த வகையிலும் உதவாமல் போனதால் ரூனி அப்செட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் பேஸ்புக்கில் தனது அணியின் தோல்விக்காக மன்னிப்பு கோரியுள்ளார் ரூனி.

சிதறிப் போய் விட்டது மனது

சிதறிப் போய் விட்டது மனது

எங்களது தோல்வியால் ரசிகர்களைப் போலவே நாங்களும் மனதளவில் சிதறிப் போயுள்ளோம். இதை ஜீரணிக்கவே முடியவில்லை.

எதுவுமே கை கொடுக்கவில்லை

எதுவுமே கை கொடுக்கவில்லை

இரு போட்டிகளுக்கு முன்பாகவும் நாங்கள் நன்கு திட்டமிட்டே களம் இறங்கினோம். ஆனால் எந்த உத்தியும் எங்களுக்குக் கை கொடுக்கவில்லை.

ஸாரி பாஸ்..

ஸாரி பாஸ்..

ரசிகர்களே ஸாரி... போட்டியைக் காண இங்கிலாந்திலிருந்து இங்கு வந்த ரசிகர்களுக்கும், உள்ளூர் ரசிகர்களுக்கும் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்... நாங்கள் சரியாக விளையாடவில்லை.. பொசுங்கிப் போய் விட்டோம்.. மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் ரூனி.

முதலில் இத்தாலி.. அடுத்து உருகுவே

முதலில் இத்தாலி.. அடுத்து உருகுவே

முதலில் இத்தாலியிடம் தோல்வியைச் சந்தித்தது இங்கிலாந்து. பின்னர் 2வது போட்டியில் உருகுவேயிடம் வீழ்ந்தது.

முட்டாள்கள்

முட்டாள்கள்

இதற்கிடையே, இங்கிலாந்து அணியை முட்டாள்களின் அணி என்று இங்கிலாந்தைச் சேர்ந்த பல பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

கடந்த 1966ல் உலக கோப்பையை வென்ற அணி இங்கிலாந்து என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Sunday, June 22, 2014, 13:04 [IST]
Other articles published on Jun 22, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+