
வெளியேறிய சிமோன்
போட்டியின் போதும் அவரது தடுமாற்றம் எதிரொலித்தது. அவர் வெறும் 13.733 ஸ்கோர் மட்டுமே பெற்றார். பிறகு, தனது பயிற்சியாளர் சிசிலி லாண்டி மற்றும் யுஎஸ்ஏ ஜிம்னாஸ்டிக்ஸ் தடகள பயிற்சியாளருடன் சிமோன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இறுதியில் அவர் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதனை, நேற்று மாலை யுஎஸ்ஏ ஜிம்னாஸ்டிக்ஸ் உறுதிசெய்தது. அதாவது, சிமோன் வெளியேறுவதை உறுதி செய்து அறிவித்தது.

தினம் ஆய்வு
பிறகு, அதிகாரப்பூர்வமாக போட்டி பட்டியல்கள் புதுப்பிக்கப்பட்டன. மாற்றி அமைக்கப்பட்டன. "சிமோன் ஒரு மருத்துவ பிரச்சினை காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். எதிர்வரும் காலக்கட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான மருத்துவ அனுமதியை பெற, அவர் தினமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்" என்று அறிவிக்கப்பட்டது.

அதிர்வலைகள்
அமெரிக்க பயிற்சியாளரின் கருத்துக்களின்படி, "பைல்ஸ் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறுவது உடல் காயத்தினால் அல்ல. அவரது மனநல பிரச்சினையே காரணம்" என்று கூறியதாக என்.பி.சி நேற்று செய்தி வெளியிட்டது. டோக்கியோவில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அமெரிக்க அணி தகுதிப் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததே பைல்ஸ் தான். இந்த நிலையில், மன நலப் பிரச்சனை காரணமாக, அவர் இறுதிப் போட்டிக்கு முன்பாக வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆரோக்கியம் தேவை
அவர் மீது வைக்கப்படும் அளவுக்கதிகமான பிரஷரே அவரது பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறுவது என்று முடிவெடுத்த தனது நிலைப்பாடு குறித்து சிமோன் மனம் திறந்துள்ளார். அதில், "விளையாட்டுகளில் இப்போது மன ஆரோக்கியம் அதிகம் தேவைப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டது போல் அர்த்தம் அல்ல. எனினும், நாம் நம்மீதும் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

ஆதங்கம்
மேலும், "நாங்களும் மனிதர்கள் தான். உலகம் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ, அதைச் செய்வதை விட நம் மனதையும் உடலையும் பாதுகாக்க வேண்டும். என் மனம் புத்துணர்ச்சியுடன், நிறைவாக, கொண்டாட்டமாக இல்லை என்பதை உணர்கிறேன்" என்று தனது ஆதங்கத்தை சிமோன் வெளிப்படுத்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications