Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியும் கூட விளையாடலாம்.. போரடிக்காது.. ஜாலியாவும் இருக்கும்.. டிரை பண்ணலாமா?

சென்னை: விளையாட்டுப் போட்டிகளும் இல்லை. வீட்டோடும் முடங்கிக் கிடக்கிறோம். லாக்டவுனும் நீட்டிக்கப்படவுள்ளது. எப்படித்தான் பொழுது போக்குவது என்பதே பலரின் கவலையாக உள்ளது.

Recommended Video

Sakshi shares pic of MS Dhoni during lockdown, Dhoni's lawn time

கொரோனாவைரஸ் பீதி ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பொழுதைக் கழிப்பது பெரிய சிரமமாக உள்ளது. திரும்பத் திரும்ப வீட்டில் உள்ளவர்களையே பார்த்துப் பார்த்து பலருக்குப் போரடிச்சுப் போயிருக்கும்.

விளையாட்டுப் போட்டிகளை டிவி சானல்கள் காட்டி வந்தாலும் கூட அதுவும் கூட ஒரு கட்டத்தில் போரடித்துப் போய் விடுகிறதுதானே.. சரி இப்படிப்பட்டவங்களுக்காக நாம மெனக்கெட்டு தேடிய சில மேட்டர்களை இங்கு தருகிறோம்.. நல்லாருக்கா பாருங்க.

பழைய விளையாட்டுதான்

இது கொஞ்சம் பழைய வீடியோதான். போன வருஷம் வந்ததுதான். ஆனால் இப்ப சூப்பரா விளையாடலாம். இந்த லாக்டவுன் சமயத்தில் அனைவருமே வீட்டோடு முடங்கிக் கிடக்கிறோம் இல்லையா. ஸோ இந்த சமயத்தில் இந்த விளையாட்டை விளையாடலாம். நல்ல பொருத்தமான விளையாட்டுதான். என்ன கண்ணாடி பாட்டில் வச்சு விளையாடாதீங்க. உடைஞ்சு போச்சுன்னா 2 வேலை ஆய்ரும். வேறு பொருட்களையும் கூட இதற்குப் பயன்படுத்தலாம்.

இதைச் செஞ்சு பாருங்க

இது இன்னொரு நல்ல பொழுது போக்கு.. ஆனால் இதைச் செய்வதற்கு முன்பு உங்களுக்கு உடல் ரீதியாக நல்ல பலம் இருக்க வேண்டும்.. உடற்பயிற்சி செய்யக் கூடியவராக இருக்க வேண்டும். குறைந்தது யோகா தெரிந்தவராக இருக்க வேண்டும். அப்படி இருப்பீர்களேயானால் இதை டிரை பண்ணிப் பார்க்கலாம்.. கொஞ்சம் ரிஸ்க்கானதுதான்.. ஸோ தெரிஞ்சவங்க மட்டும் டிரை பண்ணுங்க.

இது சூப்பரா இருக்கே

வீட்ல நாய் பூனை வளர்க்கறீங்க.. அவங்க இது மாதிரி சண்டை போடுவாங்களா.. உடனே கேமராவை கையில் எடுங்க.. அல்லது செல்போனையாவது எடுங்க. ஷூட் பண்ணுங்க.. வீடியோவாக எடுத்துக் கொண்டு அழகான கமெண்டரியை அதனுடன் சேருங்க.. நீங்களும் ரசிச்சுப் பார்க்கலாம்.. இந்த செல்லப் பிராணிகளுக்கும் போட்டுக் காட்டலாம். நண்பர்களுடனும் ஷேர் செய்து மகிழலாம். நேரடியாக ஸ்டேடியத்துக்குப் போன எபக்ட்டும் கிடைக்கும்.

ஜாலியான ஒரு விளையாட்டு

இது ஒரு ஜெம ஜாலி பொழுது போக்கு. நீங்களும் கூட இவரைப் போலவே செய்து பார்க்கலாம். வாணலியில் பாப்கார்னைப் போட்டு அது வெடித்து வருவதை அழகாக வீடியோவில் படமாக்கி அதற்கு அழகான ஒரு வர்ணனையும் கொடுத்து ஸ்டேட்டஸ் போடலாம்.. நண்பர்களுக்கு அனுப்பலாம்.. நண்பர்களுக்குள் ஜாலியான ஒரு போட்டியும் வைக்கலாம். நல்லா பொழுதும் போகும்.

போரடிச்சா இதைப் பண்ணலாம்

என்னதான் டிவி பார்த்து, விளையாட்டுப் போட்டிகளைப் பார்த்து மகிழ்ந்தாலும் நிறையப் பேருக்கு டைம் நிறையவே இருக்கும். போரடிக்கும். அதுபோன்ற சமயங்களில் என்னதான் செய்வது.. இதோ இதுமாதிரி நீங்களும் செய்து பார்க்கலாம் அல்லது உங்க வீட்டு செல்லப் பிராணிகளை இது போல செய்ய வைத்து வேடிக்கை பார்த்து மகிழலாம்.

Story first published: Monday, April 13, 2020, 9:57 [IST]
Other articles published on Apr 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+