கைகளில் காதல்... உதட்டில் புன்னகை.. வருங்கால மனைவியுடன் புகைப்படம் வெளியிட்ட சஹல்
மும்பை : இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹலுக்கு கடந்த வாரத்தில் யூ-டியூபர் தனஸ்ரீயுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
Recommended Video
இந்நிலையில், தன்னுடைய வருங்கால மனைவியுடன் தான் இணைந்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சஹல்.

அதில் தன்னுடைய கைகளில் காதல் சிம்பளை காண்பித்துள்ள சஹல், புகைப்படத்தில் காதலை வைத்துள்ளதாக கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் இதுவரை 52 ஒருநாள் போட்டிகள் மற்றும் 42 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரத்தில் யூ-டியூபர் தனஸ்ரீ வர்மாவுடன் சஹலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.
தற்போது, தன்னுடைய வருங்கால மனைவியுடன் தான் இணைந்துள்ள புதிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சஹல். அதில் தன்னுடைய கைகளில் காதல் முத்திரையை பதித்துள்ளார். மேலும் காதலை புகைப்படத்தில் வைத்துள்ளதாகவும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் அள்ளுகிறது. கோலி, ஹர்திக் பாண்டியா வரிசையில் சஹலும் தன்னுடைய ஜோடியுடன் இன்ஸ்டாவை கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications