For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை அதிதி சவுகான்

By Siva

டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த அதிதி சவுகான் இங்கிலீஷ் பெண்கள் கிளப் கால்பந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த கிளப்பில் சேர்க்கப்பட்டுள்ள முதல் இந்திய பெண் அதிதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கால்பந்து வீராங்கனை அதிதி சவுகான்(23). கோல்கீப்பரான அவர் இங்கிலீஸ் பிரீமியர் லீக் அணியான வெஸ்ட் ஹாம் யுனைடெட்டின் மகளிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முதல் இந்திய பெண் அதிதி என்பது குறிப்பிடத்தக்கது.

West Ham's Aditi Chauhan becomes India's first woman to play in England

டெல்லியைச் சேர்ந்த அதிதி பள்ளியில் படிக்கையில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் அவரை அழைத்து 19 வயதுக்குட்பட்டவர்கள் அணியில் சேர்வதற்கான தகுதி போட்டியில் விளையாடுமாறு தெரிவித்துள்ளார். அதில் இருந்து அதிதி கால்பந்து போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி வெற்றிபெற உதவியவர் அதிதி. கடந்த ஆண்டு நடந்த இன்சியான் போட்டியில் இந்திய அணியின் கோல்கீப்பராக இருந்தவர் அதிதி.

வெஸ்ட் ஹாம் அணிக்கு விளையாடும் அதிதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, August 19, 2015, 17:04 [IST]
Other articles published on Aug 19, 2015
English summary
Delhi based football player Aditi Chauhan has become the first Indian woman to play for a top English club West Ham.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X