For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட்டில் Boxing Day டெஸ்ட் என்றால் என்ன? விளையாட்டு உலகின் முக்கியமான நாள்

மும்பை : விளையாட்டு உலகில் மிகவும் முக்கியமான நாளாக பாக்ஸிங் டே என்ற நாள் பார்க்கப்படும். அதிலும் கிரிக்கெட்டில் பாக்ஸிங் டே அன்று நிச்சயமாக ஏதேனும் ஒரு சர்வதேச போட்டி கண்டிப்பாக நடைபெறும். அது என்ன பாக்சிங் டே கிரிக்கெட்டுக்கும் பாக்ஸிங் டேக்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கலாம்.

அதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. டிசம்பர் 26 ஆம் தேதி தான் பாக்ஸிங் டே என்று கருதப்படும். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் பாக்ஸிங் டே என்று சொல்வார்கள். இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா? கிறிஸ்துமஸ்க்கு அளிக்கப்படும் பரிசுகளை திறந்து பார்ப்பதும் மற்றும் இல்லாத மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவதும் தான் பாக்ஸிங் டே ஆகும்.

What is Boxing Day in cricket - Why is it fans gives more importance in sports

இன்னும் சொல்லப்போனால் பரிசு பொருட்களைப் அட்டைப்பெட்டியில் இருந்துதானே பிரிப்பார்கள். அதனைக் குறிக்கும் விதமாகத்தான் பாக்ஸிங் டே என்று சொல்வார்கள். எப்படி நமது ஊரில் காணும் பொங்கல் அன்று வெளியே சென்று கண்டிப்பாக எதையாவது பார்க்க வேண்டும் என்று கூறுவார்களோ அதே போல் பாக்ஸிங் டே அன்று குடும்பத்துடன் வெளியே சென்று ஏதேனும் விளையாட்டுப் போட்டியையோ, இல்லை ஊர் சுற்றவோ வேண்டும்.

இதனால்தான் பாக்சிங் டே அன்று கண்டிப்பாக ஏதாவது ஒரு விளையாட்டு போட்டி சர்வதேச அளவில் நடைபெறும். ஆஸ்திரேலியாவில் பாரம்பரியமாக இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதுவும் ஆஸ்திரேலியாவில் கண்டிப்பாக பாக்ஸிங் டே போட்டி நடந்து தீரும். 1950 முதல் பாக்ஸிங் டே போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 1980 முதல் தொடர்ந்து பாக்ஸிங் டே போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இடையில் 1989 ஆம் ஆண்டு மட்டும் தான் நடைபெறவில்லை. அன்று முதல் இந்த ஆண்டு வரை பாக்சிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும். இதேபோல் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பாக்ஸிங் டே அன்று ஏதாவது ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறும். 2023 ஆம் ஆண்டு பாக்சிங் டே அன்று ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் பாரம்பரியமிக்க பாக்சிங் டேட் டெஸ்டில் விளையாடுகிறது.

இதேபோன்று தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பாக்சிங் டே டெஸ்டில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் பலபரிட்சை நடத்துகிறது. இப்படி 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று மகத்தான சாதனையை படைத்திருந்தது. இதனால் பாக்ஸிங் டே அன்று குடும்பத்தினர் நண்பர்கள் ஒட்டுமொத்த நாடும் விளையாட்டுப் போட்டியை பார்க்கும் என்பதால் அன்றைய நாள் சிறப்பாக செயல்பட்டு விட வேண்டும் என்று ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் நினைப்பார்கள். இந்த பாக்ஸிங் டே கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் கால்பந்து, ரக்பி போன்ற அனைத்து வித விளையாட்டிலும் முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, December 25, 2023, 13:45 [IST]
Other articles published on Dec 25, 2023
English summary
What is Boxing Day in cricket - Why is it fans gives more importance in sports கிரிக்கெட்டில் Boxing Day டெஸ்ட் என்றால் என்ன? விளையாட்டு உலகின் முக்கியமான நாள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+