டில்லி: 2024 ஆண்டுக்கான விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுப் பட்டியலில் மனு பாக்கர் பெயர் விட்டுப் போனதால் தாமதமாகி, இன்று (ஜனவரி 17 அன்று) நடைபெற உள்ளது. இந்த நிலையில் துரோணாச்சாரியார் விருதுக்காக சிறந்த பயிற்சியாளர்களை தேர்வு செய்வதில் உள்ள குழப்பத்தை பற்றி 2024 ஒலிம்பிக் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர்களின் தனிப்பட்ட பயிற்சியாளர்கள் மைக்கேல் இணையதளத்திடம் பேசினர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு துரோணாச்சாரியா விருது வென்ற துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா மனு பாக்கரின் பயிற்சியாளரும் ஆவார். அவர் மனு பாக்கருக்கு முதலில் பதக்கம் விடுபட்டு போனது பற்றி பேசுகையில். "ஒரு பதக்கம் வென்ற வீரர் எதற்காக விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும்? இது மிகவும் விசித்திரமாக உள்ளது. மனு பாக்கரை தயார் செய்ததில் வேறு யாருக்கும் பங்கு இல்லை. அது எனது வேலை. மனு வென்ற பதக்கங்கள் நாட்டுக்காக. நான் எனது தேசத்துக்கு பணியாற்றினேன். அவ்வளவு தான்." எனக் கூறினார்.

அதே போல, 2024 ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவின் தனிப்பட்ட பயிற்சியாளர் தீபாலி தேஷ்பாண்டே இது பற்றி பேசி இருக்கிறார். முதலில் அறிவிக்கப்பட்ட பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் மைகேல் ஆங்கில இணைய தளத்தில் வெளியான அவரது பேட்டியின் காரணமாக அவரது பெயர் துரோணாச்சாரியா விருதுப் பட்டியலில் பின்னர் சேர்க்கப்பட்டது.
அது பற்றி தீபாலி தேஷ்பாண்டே பேசுகையில், "மைகேல் இணைய தளத்தில் எனது நிலையை பற்றி செய்தி வெளியானதால் தான் எனக்கு விருது வழங்கப்படுகிறது. ஒரு பயிற்சியாளராக நான் தனிப்பட்ட பயிற்சியாளரோ அல்லது தனியார் பயிற்சியாளரோ.. எப்படி இருந்தாலும் அது முக்கியமில்லை. நான் ஒரு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை தான். அந்த வகையில் துரோணாச்சாரியா விருது என்பது எனக்கு தேசிய அளவில் அளிக்கப்படும் கௌரவம் ஆகும். இதை பெறுவதற்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன். அதே சமயம் உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் இதுபோன்ற விஷயங்களை வெளியுலகுக்கு எடுத்து கூற வேண்டும்." என்றார்.
மேலும் உயர் திறன் பயிற்சியாளர்களுக்கு மட்டும்தான் விருது என்ற ஒரு சர்ச்சையும் நிலவிக் கொண்டிருக்கிறது. அது பற்றி பேசிய தீபாலி தேஷ்பாண்டே, "உயர்திறன் என்றால் என்ன? ஒரு துப்பாக்கி சுடுதல் வீரரிடம் இருந்து ஒரு பயிற்சியாளர் சிறந்த செயல்பாட்டை வெளிக்கொண்டு வரவேண்டும். நான் என்னிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு எந்த அளவுக்கு பயிற்சி அளிக்கிறேன் என்றால் நான் இல்லை என்றாலும் அவர்கள் தங்களின் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள். அதனால் தான் பாரிஸில் ஸ்வப்னில் பதக்கம் வென்றார்." என்றார்.
மேலும், "நான் இதற்கு முன்பு தேசிய அளவில் பயிற்சியாளராக இருந்து இருக்கிறேன். இப்போதும் பலருக்கு பயிற்சி அளித்து வருகிறேன். நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதுதான் உயர்திறன் பயிற்சி." என்றார் தீபாலி தேஷ்பாண்டே.
சமீபத்தில் போபாலில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் என்ற அனன்யா நாயுடுவுக்கு முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அஞ்சலி பகவத் பயிற்சி அளித்து இருந்தார். அவர் புனேவில் பல துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு பயிற்சி அளித்து இருக்கிறார். அவர் இதற்கு முன் அர்ஜுனா விருதையும் தியான் சந்தையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பேசுகையில், "நான் பல துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். ஒவ்வொருவரும் சிறப்பானவர்கள். அவர்களுக்கு நாம் அடிப்படையையோ, உத்திகளையோ சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. போட்டி சூழ்நிலையில், இறுதிப்போட்டி போன்ற பதற்றமான இடத்தில் எப்படி செயல்பட வேண்டும்? என்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுத்து, அவர்களை மனதளவில் தயார் செய்வதே எனது வேலை. இதை பயிற்சி என்று கூறினாலும் சரி, உயர்திறன் பயிற்சி என்று கூறினாலும் சரி, தேசிய அளவில் சாம்பியனை உருவாக்குவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான்." என்று கூறினார்.