Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன்னை தூக்கும்போது வாழ்க்கை அர்த்தமாக மாறிடுது... அம்மாவின் அன்புக்கவிதை

மும்பை: கடந்த மாதத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடிக்கு மகன் பிறந்துள்ளான்.

இந்த புதிய வரவை இந்த ஜோடி கொண்டாடி வருகிறது. ஒருபக்கம் டயாப்பர் வாங்குவதும், மறுபுறம் ரோஜாக்களால் வாழ்த்துக்களை பகிர்வதுமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிறைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தன்னுடைய மகனுடன் தான் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நடாஷா. இதற்கு பல்வேறு எமோஜிகளுடன் லைக்கியுள்ளார் ஹர்திக் பாண்டியா.

தயாராகும் ஹர்திக் பாண்டியா

தயாராகும் ஹர்திக் பாண்டியா

முதுகுவலி காரணமாக கடந்த ஆண்டில் இந்திய அணியில் இடம்பெறாத ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தற்போது நடைபெறவுள்ள ஐபிஎல் 2020 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடவுள்ளார். இதையொட்டி, தனது வீட்டிலேயே பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து பல்வேறு போஸ்ட்களையும் இந்த லாக் டவுன் சமயத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்களில் வெளியிட்டு வருகிறார்.

கொண்டாடிவரும் பாண்டியா

கொண்டாடிவரும் பாண்டியா

கடந்த ஜனவரி மாதத்தில் தன்னுடைய நிச்சயதார்த்தத்தை நடுக்கடலில் சிறப்பாக கொண்டாடி, அதுகுறித்து போஸ்ட்களையும் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களையும் சக வீரர்களையும் ஆச்சரியப்படுத்திய ஹர்திக் பாண்டியாவிற்கு கடந்த மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையொட்டி தனது வாழ்க்கை மிகவும் கொண்டாட்டமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார் பாண்டியா.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

தன்னுடைய வீட்டின் புதிய வரவிற்காக தான் டயாப்பர் வாங்க சென்றது, நடாஷாவிற்கு ரோஜா பொக்கே அளித்து வாழ்த்து கூறியது, தன்னுடைய மகனின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளை தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் ஹர்திக் பாண்டியா. இதற்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

வெளியிட்ட நடாஷா

வெளியிட்ட நடாஷா

இந்நிலையில், தற்போது தன்னுடைய மகனுடன் தான் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடாஷா ஸ்டான்கோவிக். அவனை தான் தூக்கும்போது வாழ்க்கை அர்த்தமானதாக மாறுவதாகவும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ஹர்திக் பாண்டியா பல்வேறு எமோஜிகளுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மகன் தன்னுடைய விரலை பிடித்தபடி உள்ள புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

Story first published: Thursday, August 13, 2020, 20:53 [IST]
Other articles published on Aug 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+