குத்துச்சண்டை போட்டியில் முகமது அலியை தோற்கடித்த 3 வயது சிறுவன்
நியூயார்க்: 3 வயது சிறுவன் பிரபல குத்துச்சண்டை வீரரான முகமது அலியை தோற்கடித்த வீடியோ பலரின் மனதை கவர்ந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் முன்னாள் குத்துச்சண்டை வீரரான முகமது அலி. அவர் தனது கெரியரின் உச்சியில் இருக்கையில் அவருடன் சண்டை போட பலர் அஞ்சினர். அவர் இடைவிடாது குத்துவதற்கு பெயர் போனவர். அத்தகையவரை சரியாக நடக்கக் கூடத் தெரியாத மூன்று வயது சிறுவன் குத்துச்சண்டையில் தோற்கடித்துள்ளார்.
இது குறித்த வீடியோ பலரின் மனதை கவர்ந்துள்ளது. வீடியோவில் சிறுவன் முகமது அலியின் முகத்தில் அவரது பாணியில் இடைவிடாது குத்துகிறார். அவரும் சிறுவனின் அடியை தாங்க முடியாதது போன்று கீழே விழுகிறார். அதன் பிறகு எழுந்து அமர்ந்து சிறுவனிடம் முகத்தில் குத்து வாங்கிறார்.
பின்னர் மீண்டும் அடி தாங்க முடியாதது போன்று படுத்துவிட்டார். இதையடுத்து சிறுவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. சிறுவனோ முகமது அலியை வென்ற மகிழ்ச்சியில் கைகளை தட்டுகிறார். அதன் பிறகு சிறுவன் முகமது அலிக்கு முத்தம் கொடுக்கிறார்.
சிறுவனிடம் விரும்பித் தோல்வி அடைந்த முகமது அலி முகத்தில் பெருமிதத்தை காண முடிகிறது.


Click it and Unblock the Notifications