For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்காவை வீழ்த்த செஸ் ஆடி.. இன்று உலக நம்.1 வீரரை வீழ்த்தியது எப்படி.. ஆச்சரியமூட்டும் பிரக்ஞானந்தா

சென்னை: உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை, தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோற்கடித்தை அடுத்து, அவர் யார் என தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வருகிறது.

இதில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் உலகின் நம்.1 வீரரான கார்ல்சனும் மோதினர். கருப்பு நிற காய்களை வைத்து விளையாடிய பிரக்ஞானந்தா 39 நகர்வுகளில் வெற்றியை பெற்றார்.

பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

16 வயதாகும் பிரக்ஞானந்தா சென்னையை சேர்ந்தவர் ஆவார். நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவர். கூட்டுறவு வங்கியில் பணிப்புரிந்து வரும் அவரின் தந்தை போலியாவால் பாதிக்கப்பட்டவர். அவரின் மருத்துவ செலவுகள், குடும்பச்செலவுகள் என இக்கட்டான சூழலில் இருந்த போதும் பிரக்ஞானந்தா தனது செஸ் விளையாட்டை கைவிடவில்லை.

தொடக்கம் தந்த சகோதரி

தொடக்கம் தந்த சகோதரி

பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் செஸ் போட்டியில் கலக்கி வருகிறார். அவரின் அக்காவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தான் பிரக்ஞானந்தா முதன்முதலில் செஸ் விளையாட தொடங்கியுள்ளார். ஆனால் அவரின் தற்போதைய இலக்கு உலக செஸ் சாம்பியனாவது என்று உள்ளது.

சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம்

வெறும் 7 வயதில் FIDE மாஸ்டர் பட்டமும், எட்டு வாயதுக்குட்ப்பட்டோருக்கான (2013) மற்றும் 10 வயதுக்குட்பட்டோருக்கான (2015) உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று அசத்தினார். அதனை தொடர்ந்து 2016ல் உலகின் யங் இன்டெர்நேஷ்னல் மாஸ்டர் என்ற பட்டத்தையும் வென்றார்.

கிராண்ட் மாஸ்டர் பட்டம்

கிராண்ட் மாஸ்டர் பட்டம்

பின்னர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல ஆர்வம் காட்டிய பிரக்ஞானந்தா அதற்கான தகுதி சுற்றுகளிலும் வெற்றி பெற்று, FIDE ரேட்டிங்கும் பெற்றார். அதன் மூலாம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பன்னிரண்டு வயதில் வென்றார். உலகளவில் பதின் பருவம் எட்டுவதற்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற 2வது வீரர் பிரக்ஞானந்தாவாகும்.

தாயின் மந்திரம்

தாயின் மந்திரம்

பிரக்ஞானந்தா மற்றும் அவரின் சகோதரியின் வெற்றிகளுக்கு முதுகெலும்பாக இருப்பது தாயார் நாகலட்சுமி ஆகும். தனது உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தபோதும், வெவ்வாறு நாடுகளுக்கு தனது குழந்தைகளை அழைத்துச்சென்று வருகிறார். அவர் கொடுக்கும் ஊக்கத்தால் பிரக்ஞானந்தா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார். அதன் முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில் தான், இன்று உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Monday, February 21, 2022, 22:51 [IST]
Other articles published on Feb 21, 2022
English summary
who is praggnanandhaa, Chennai boy beats world number 1 chess player carlsen in just 39 moves
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+