Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களின் நெஞ்சில் இறங்கிய இடி.. டென்னிஸ் "தல" ஃபெடரர் ஒலிம்பிக்கில் இருந்து விலகல்.. ஏன்?

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக, டென்னிஸ் "தல" ரோஜர் ஃபெடரர் அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வரும் ஜுலை. 23ம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. கொரோனாவிற்கு இடையே இந்த போட்டிகள் நடக்க உள்ள நிலையில் இதற்காக பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

ஜுலை 23 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்க உள்ளன. கடந்த 2020ம் ஆண்டே நடக்கவிருந்த ஒலிம்பிக், போட்டிகள் கொரோனா காரணமாக இந்த வருடம் தள்ளி வைக்கப்பட்டது.

 ஃபெடரர் விலகல்

ஃபெடரர் விலகல்

இந்த நிலையில், மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இந்த வருடம் ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், டென்னிஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தரும் செய்தியாக, சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவது இல்லை என அறிவித்துள்ளார். இது ரசிகர்களை மட்டுமின்றி, சக வீரர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 புல் தரை போட்டிகளில்

புல் தரை போட்டிகளில்

இதுதொடர்பாக ஃபெடரர் கூறுகையில், முழங்கால் காயத்தால் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுகிறேன். ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவது தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில், "புல் தரை போட்டிகளில், துரதிர்ஷ்டவசமாக எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.

 எனது மரியாதை இது

எனது மரியாதை இது

இதனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நான் விலக வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். ஒவ்வொரு முறையும் நான் சுவிட்சர்லாந்துக்காக விளையாடுவதை, எனது டென்னிஸ் வாழ்க்கையின் மரியாதை மற்றும் சிறப்பம்சமாக நினைப்பதால், இம்முறை கலந்து கொள்ள முடியாதது குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன்" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

 உண்மையான வெற்றியல்ல

உண்மையான வெற்றியல்ல

ஃபெடரரின் இந்த விலகல், டென்னிஸ் ரசிகர்களை தாண்டி, சக வீரர்களையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சில ரசிகர்கள் சமூக தளங்களில், "இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளை பார்க்கப் போவதில்லை" என்று பதிவிட்டு வருகின்றனர். சிலரோ, ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் யார் வென்றாலும், அது அவர்களின் உண்மையான வெற்றியாக இருக்காது என்ற ரீதியிலும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Wednesday, July 14, 2021, 13:45 [IST]
Other articles published on Jul 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+