Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிஎம்டபிள்யூ காரை திருப்பித்தருகிறார் தீபா கர்மாக்கர்.. பணமாக பெற விருப்பம்?

ஹைதராபாத்: சச்சின் கையால் பரிசாக பெற்ற பிஎம்டபிள்யூ காரை ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாக்கர் திருப்பி தர திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதாக காரை பரிசளித்த சாமுண்டேஷ்வரநாத் உறுதியளித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் தொடரின், ஜிம்னாஸ்டிக் போட்டித்தொடரில் 4வது இடம் பிடித்தவர் தீபா கர்மாக்கர்.

பேட்மின்டனில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து, மல்யுத்த வெண்கல பதக்க வீராங்கனை சாக்ஷி மாலிக் போலவே தீபா கர்மாக்கருக்கும், இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சச்சின் வழங்கினார்

சச்சின் வழங்கினார்

ஹைதராபாத் பேட்மின்டன் அசோசியேஷன் தலைவர் சாமுண்டேஷ்வரநாத், இவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார்.

இதை சச்சின் டெண்டுல்கர் தனது கரங்களால் பரிசளித்தார். இந்நிலையில், பிஎம்டபிள்யூ காரை திருப்பி வழங்க தீபா கர்மாக்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குண்டு, குழி சாலை

குண்டு, குழி சாலை

இதற்கான உரிய காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது பெற்றோரோ, சொந்த ஊரான அகர்த்தலா (திரிபுரா) போன்ற சிறிய நகரில், குண்டும், குழியுமான சாலையில், பிஎம்டபிள்யூ கார் என்பது சரிவராது. மேலும், அதை பராமரிப்பதும் கஷ்டம் என கூறியுள்ளனர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதுகுறித்து சாமுண்டேஷ்வரநாத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், தீபா கர்மாக்கரிடம் இதுகுறித்து பேச உள்ளேன். வீரர், வீராங்கனைகள் ஊக்கம் பெறுவதற்காகவே கார் தரப்பட்டது. அதில் அவருக்கு ஏதாவது பிரச்சினை இருப்பின், மாற்று ஏற்பாடுகளை செய்து தர தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

ரொக்கப் பணம்

ரொக்கப் பணம்

அனேகமாக, காருக்கு பதிலாக ரொக்கப் பணத்தை பரிசாக வழங்க சாமுண்டேஷ்வரநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தீபா கர்மாக்கர் ஏற்பாரா அல்லது மறுப்பாரா என்பது இன்னும் தெரியவில்லை.

Story first published: Thursday, October 13, 2016, 10:42 [IST]
Other articles published on Oct 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+