Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குளிர்கால ஒலிம்பிக்கில் ஜாக்கிசான்..!! ஜாக்கிசானின் பெயரை மாற்றிய சீன அரசு..!! நாளை தொடக்க விழா..!!

பீய்ஜிங்: 24வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவின் தலைநகர் பீய்ஜிங்கில் நாளை தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடும் பயோ பபுள் விதிகளை பின்பற்றி இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த தொடரில் 94 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். 14 ஆண்டுகளில் கோடைக்கால ஒலிம்பிக் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் ஆகிய போட்டிகளை நடத்தும் ஒரே நகரம் என்ற பெருமையை பீய்ஜிங் பெற்றுள்ளது.

ஜாக்கிசான்

ஜாக்கிசான்

இந்த நிலையில், குளிர்கால ஒலிம்பிக்கின் இறுதி கவுண்டவுனை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி தொடர் ஓட்டம் நேற்று தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஓட்டத்தின் காலம் குறைக்கப்பட்டது.இந்த நிலையில், இன்று சீன பெருஞ்சுவரில் நடைபெற்ற தொடர் ஓட்டத்தில் பிரபல நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி ஓடினார்.

சீன பெயர்

சீன பெயர்

இது ஜாக்கிசான் பங்கேற்கும் 4வது ஒலிம்பிக் போட்டியாகும். சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் சம்பவத்தால் பல பிரபலங்கள் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.இதனால் சீன அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஜாக்கிசானை சீன அரசு அழைத்துள்ளது. எனினும் சீன அரசு தங்களது செய்தி குறிப்பில் ஜாக்கிசானின் பெயரை குறிப்பிடாமல் அவரது சீன பெயரான செள்ன காங்சென் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3000 கலைஞர்கள்

3000 கலைஞர்கள்

மைனஸ் 11 டிகிரி குளிரில் இந்த ஓட்டம் நடைபெற்றது. இந்திய நேரப்படி நாளை மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறும். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று சீன கலாச்சாரத்தை போற்றும் விதமாக கலை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, எனினும் உள்ளூர் மக்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

ஒரே இந்தியர்

ஒரே இந்தியர்

சீன குளிர்கால ஒலிம்பிக்கை அமெரிக்க அரசு தூதரக ரீதியாக புறக்கணித்துள்ளது. எனினும் அதிகபட்சமாக 224 போட்டியாளர்களை அமெரிக்க சார்பாக பங்கேற்கின்றனர். கனடா 215 பேரையும்,சீனா 174 பேரையும், சுவிட்சர்லாந்து சார்பாக 167 பேரும் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பாக ஆரிஃப் கான் என்ற ஒரே வீரர் மட்டும் பனிச்சறுக்கில் பங்கேற்கிறார்.

Story first published: Thursday, February 3, 2022, 18:28 [IST]
Other articles published on Feb 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+