Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மஹி மாமா.. சூப்பர்... நான்.. சொல்லலே...அச்சச்சோ...!

வீரர்களுக்கு பெரிய ஆதரவே அவர்களது மனைவியரும், காதலியரும்தான். முன்பெல்லாம் பப்ளிக்காக மைதானத்திற்கு வந்து வீரர்களை அவர்களது மனைவியரும், காதலியரும் ஆதரித்து ஊக்கப்படுத்துவதை இந்தியாவில் அதிகம் பார்க்க முடியாது.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. வீரர்களை விட இவர்களைப் பார்க்கத்தான் பெரும் கூட்டம் கூடுகிறது. காரணம், அப்படி ஒரு கலகலப்பான திருவிழா போல மாறி விட்டது இந்த காட்சிகள்.

2013ல் நடந்த ஐபிஎல் திருவிழாவிலும் கூட இந்த கோலாகலத்தைக் காண முடிந்தது. அதில் டாப்பாக கலக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷிதான். அவர் போன இடத்திலெல்லாம் கேமராக்கள் அவரையே வட்டமிட்டபடி இருந்தன.

எங்கெங்கு காணினும் சாக்ஷியடா...

எங்கெங்கு காணினும் சாக்ஷியடா...

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய போட்டிகளிலெல்லாம் தவறாமல் ஸ்டேடியத்தில் ஆஜராகியிருந்தார் சாக்ஷி. அவரை கேமராக்கள் அங்குலம் அங்குலமாக படம் பிடித்து மகிழ்ந்தன. சிரித்தால் போட்டோ, முகம் சுளித்தால் போட்டோ.. என விதம் விதமாக படமெடுத்தன கேமராக்கள்.

அச்சச்சோ....

அச்சச்சோ....

அச்சச்சோ.. அவுட்டாயிட்டாரே மஹி.. .என்று சொல்கிறாரோ சாக்ஷி.

சூப்பர்...

சூப்பர்...

ஃபோர் அடிச்சதுக்காக இப்படி சந்தோஷக் கூச்சலோ....

மஹி மாமா

மஹி மாமா

மஹி மாமா... எப்படியாச்சும் ஒரு சதம் போட்டுரு.. ஓ.கே... என்று மல்லிகையைக் கையில் ஏந்தி மயக்கும் குரலில் கிசுகிசுக்கிறாரோ சாக்ஷி...

நான்.. சொல்லலே...

நான்.. சொல்லலே...

நான் சொல்லலே... எங்க வீட்டுக்காரர் எப்பவுமே சூப்பரா ஆடுவாரு.. டீமையும் ஜெயிக்க வச்சுருவாரு... என்று பூரிப்போடு சொல்கிறாரோ

வெற்றி நமதே...

வெற்றி நமதே...

வெற்றி நமதே.. வென்று வாருங்கள் என்று டோணிக்கு சிக்னல் காட்டுகிறாரா சாக்ஷி...

ஊத்திக்கிச்சே...!

ஊத்திக்கிச்சே...!

குட் பாய்ஸ்.. குட் கேம்.. பட் பேட் லக்.. நாங்க தோத்துப் போயிட்டோம்ப்பா....

ராஜ அம்சத்துடன் ஷில்பா

ராஜ அம்சத்துடன் ஷில்பா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும்.. ஒரு வெற்றியின் சந்தோஷத் தழுவலில்...

அட... ராணாவுடன் திரிஷா!

அட... ராணாவுடன் திரிஷா!

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வேடிக்கை பார்க்க வந்த திரிஷா.. கூடவே ராணாவும்.

சிரிப்போவியமாக உதயநிதி

சிரிப்போவியமாக உதயநிதி

தயாரிப்பாளர் - நடிகர் உதயநிதி ஸ்டாலினையும் ஸ்டேடியம் பக்கம் பார்க்க முடிந்தது.

ஓ.. சானியா!

ஓ.. சானியா!

ஹைதராபாத் அணியினரின் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்கவும்.. உற்சாகக் குரல் எழுப்பவும்.. ஸ்டேடியத்தை அலங்கரித்த சானியா மிர்ஸா..

பிரியா மணியுடன்.. 'சார்மிங்' சார்மி..

பிரியா மணியுடன்.. 'சார்மிங்' சார்மி..

ஹைதராபாத் அணியை உற்சாகப்படுத்த குழுமியிருந்த சார்மி்யும், பிரியாமணியும்.

அஞ்சலியும்.. சச்சின் மகளும்

அஞ்சலியும்.. சச்சின் மகளும்

சச்சின் டெண்டுல்கரின் மும்பை இந்தியன்ஸ் அணியை ஊக்கப்படுத்த ஸ்டேடியத்திற்குத் தவறாமல் வந்து போன மனைவியும், மகளும்...

Story first published: Wednesday, December 18, 2013, 15:22 [IST]
Other articles published on Dec 18, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+