Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக செஸ் சாம்பியன்ஷிப் 13வது சுற்று போட்டி டிரா.. நடப்பு சாம்பியன் லீரனுக்கு நெருக்கடி தந்த குகேஷ்

சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 13வது சுற்று ஆட்டம் சமனில் முடிவடைந்தது. நடப்புச் சாம்பியன் ஆன டிங் லிரனும் தமிழக வீரருமான குக்கேஷும் பல பரிட்சை நடத்தினர். இதில் முதல் சுற்று போட்டியில் டிங் லீரனும் மூன்றாவது சுற்று போட்டிகள் குகேஷூம் வெற்றி பெற்றனர்.

இதனை அடுத்து நான்காவது சுற்றில் இருந்து பத்தாவது சுற்று ஆட்டம் வரை சமனில் முடிந்தது.இதனை அடுத்து 11-வது சுற்றில் அபாரமாக விளையாடிய குகேஷ் வெற்றிபெற பன்னிரண்டாவது சுற்று மீண்டும் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார்.

world chess championship gukesh world chess championship 2024 chess

இதனை அடுத்து இரு வீரர்களும் தலா 6 புள்ளிகளுடன் சமனில் இருந்தனர். இதை அடுத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 13வது சுற்று போட்டி நடைபெற்றது.இதில் ஆரம்பத்தில் டிங் லீரன் அபாரமாக விளையாடி காய்கள் நகர்த்த அதற்கு குகேஷ் தக்க பதிலடி கொடுத்தார். ஒரு கட்டத்தில் குகேஷ் தற்காப்பு ஆட்டத்தை கடைப்பிடிக்க டிங் லீரன் வெற்றியை பெற வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தார்.

ஆனால் அவருக்கு குகேஷ் தடை போட்டார். இதை அடுத்து சுமார் 69 நகர்த்தலுக்கு பிறகு இருவரும் போட்டியை சமனில் முடித்துக் கொள்ள ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து இரு வீரர்களும் தலா ஆறரை புள்ளிகள் பெற்று இருக்கிறார்கள். இதனை அடுத்து நாளை 14வது சுற்று போட்டி நடைபெற இருக்கிறது.

இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் ஒரு புள்ளியைப் பெற்று ஏழரைப் புள்ளிகளை அடைந்தால் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விடுவார். இரு வீரர்களும் போட்டியை சமனில் முடித்தால் இருவருமே 7 புள்ளிகளை பெற்று இருப்பார்கள். இதன் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க ராபிட் சுற்று நாளை மறுநாள் நடைபெறும். கிளைமாக்ஸ் நோக்கி உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நகர்ந்து இருப்பதால் யார் சாம்பியன் ஆகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Wednesday, December 11, 2024, 20:40 [IST]
Other articles published on Dec 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+