Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக செஸ் சாம்பியன்ஷிப்.. முதல் சுற்றில் தோல்வி அடைந்த குகேஷ்.. 2ஆம் சுற்று எப்போது? தேதி, நேரம்

சென்னை: 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ் மற்றும் சீனாவின் டிங் லிரன் இடையே ஆன முதல் சுற்று போட்டி முடிவடைந்தது. அதில் டிங் லிரன் வெற்றி பெற்றார். குகேஷ் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இரண்டாவது சுற்று போட்டி நவம்பர் 26 நடைபெற உள்ளது.

இந்த தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 26 அன்று இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்று நடைபெறும். இதுவரை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஒரே இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.

world chess championship world chess championship 2024 chess

அவர் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. சீனாவின் டிங் லிரன் மற்றும் குகேஷ் இடையே 14 சுற்றுகள் கொண்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் முதல் போட்டியில் குகேஷ் சிலர் தவறுகளை செய்ததால் தோல்வி அடைந்தார். இன்னும் 13 சுற்றுகள் இருப்பதால் குகேஷ் இந்த தொடரில் மீண்டும் முன்னேறிச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, இரண்டாவது சுற்று போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இரண்டாவது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றால் 1 - 1 என சமநிலையை எட்ட முடியும். 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை காண விரும்புபவர்கள் ஃபிடேவின் (FIDE) யூட்யூப் (YouTube) மற்றும் ட்விட்ச் (Twitch) சமூக வலைதள கணக்குகளில் இலவசமாக பார்க்கலாம். அதே போல செஸ் டாட் காம் (chess . com) இன் யூட்யூப் (YouTube) மற்றும் ட்விட்ச் (Twitch) சமூக வலைதள கணக்குகளில் இலவசமாக பார்க்கலாம்

Story first published: Tuesday, November 26, 2024, 11:12 [IST]
Other articles published on Nov 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+