Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 3வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ்.. சீன வீரர் லிரனுக்கு தக்க பதிலடி

சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மூன்றாவது சுற்றில் சீன வீரர் டிங் லிரனை தமிழக வீரர் குகேஷ் வீழ்த்தி தக்க பதிலடி கொடுத்திருக்கின்றார். நடப்புச் சாம்பியன் ஆன சீன வீரர் டிங் லிரனுடன் 14 சுற்றுகள் கொண்ட தொடரில் தமிழக வீரர் குகேஷ் பலப்பரிட்சை நடத்துகிறார்.

ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரருக்கு ஒரு புள்ளியும் சமனில் போட்டிகள் முடிவடைந்தால் இரு வீரர்களுக்கு அரை புள்ளிகளும் வழங்கப்படும். இதனால் முதலில் யார் ஏழரைப் புள்ளிகளை பெறுகிறார்களோ அவர்கள் உலக சாம்பியனாக அறிவிக்கப்படுவார்கள்.

world chess championship 2024 gukesh vs ding liren chess 2024 other tags

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் முதல் சுற்றில் நடப்பு உலக சாம்பியன் டிங் லிரன் வெற்றி பெற இரண்டாவது சுற்று ஆட்டம் சமனில் முடிந்தது. இதனை அடுத்து டிங் லிரன் ஒன்றரைக்கு அரை புள்ளிகள் என்று முன்னிலையில் இருந்தார். இந்த சூழ்நிலையில் மூன்றாவது சுற்று போட்டி இன்று நடைபெற்றது.

இதில் வெற்றி பெற வேண்டிய உத்வேகத்தில் தமிழக வீரர் குகேஷ் விளையாடினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலில் இருந்தே குகேஷ் அதிரடியாக காய்களை நகர்த்தி டீம் லீரனுக்கு நெருக்கடி கொடுத்தார். ஒரு கட்டத்தின் மேல் லீரனால் சமாளிக்க முடியவில்லை. இதை அடுத்து ஆட்டத்தின் 37 வது நகர்த்தலில் குகேஷ் டிங் லீரனை வீழ்த்தி ஒரு புள்ளியை பெற்றார்.

இதன் மூலம் மூன்று சுற்றுகள் முடிவில் இரு வீரர்களும் தலா ஒன்றரை புள்ளிகள் பெற்று சமநிலையில் இருக்கிறார்கள். இதனை அடுத்து வியாழக்கிழமை ஓய்வு நாளாகும். நான்காவது சுற்று போட்டி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மனதளவில் மூன்றாவது சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் டிங் லீரன் சோர்வாகிவிட்டார் என்று செஸ் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இந்த ஓய்வு இரு வீரர்களுக்குமே வரப் பிரசாதமாக இருக்கும்.

Story first published: Wednesday, November 27, 2024, 19:40 [IST]
Other articles published on Nov 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+