Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக செஸ் சாம்பியன்ஷிப்.. டிராவில் முடிவடைந்த 2வது சுற்று ஆட்டம்.. தமிழக வீரர் குகேஷ் பின்னடைவு!

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷி தொடரில் சீனாவின் டிங் லிரன் மற்றும் தமிழக வீரர் குகேஷ் இடையிலான 2வது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது. இதனால் புள்ளிகள் கணக்கில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன் முன்னிலையில் இருக்கிறார்.

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் டிங் லிரன் மற்றும் தமிழக வீரர் குகேஷ் இடையிலான 2வது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது. இதனால் புள்ளிகள் கணக்கில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன் முன்னிலையில் இருக்கிறார்.


இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் மொத்தமாக 14 சுற்றுகளை கொண்டது. எந்த வீரர் முதலில் 7.5 புள்ளிகளை பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளராக கருதப்படுவார். இந்த நிலையில் முதல் சுற்றுப் போட்டியில் சீனாவின் டிங் லிரனிடன் தமிழக வீரர் குகேஷ் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் 2வது சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது.

world chess championship world chess championship 2024 chess 2024


இந்த போட்டியில் தமிழக வீரர் குகேஷ் கருப்பு காய்களுடன் விளையாடினார். இருந்தாலும் 14 நகர்த்தலுக்கு பின் குகேஷ் சிறிய பின்னடைவை சந்தித்தார். ஆனால் அதனை 20வது நகர்த்தலின் போது சரி செய்த நிலையில், ஆட்டம் 50 நிமிடங்களை கடந்து சென்றது. இறுதியாக ஆட்டம் டிராவில் முடிவடைந்த நிலையில், இருவருக்கும் சரி சமமாக 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 32 வயதாகும் சீனாவின் டிங் லிரன் 1.5 - 0.5 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருக்கிறார். உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் முதல்முறையாக விளையாடுவதால், அவருக்கு அழுத்தம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை அடுத்தடுத்த போட்டிகளில் குகேஷ் சரிசெய்வார் என்று இந்திய செஸ் சாம்பியன்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, November 26, 2024, 20:22 [IST]
Other articles published on Nov 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+