Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றை கடுமையாக போராடி 'டிரா' செய்தார் ஆனந்த்!

சோச்சி, ரஷ்யா: ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டப் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தும், நார்வே வீரரும், நடப்புச் சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சனும் இந்தப் போட்டியில் மோதி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆனந்திடமிருந்து பட்டத்தை பறித்தவர் கார்ல்சன் என்பது நினைவிருக்கலாம்.

முதல் சுற்று ஆட்டத்தில் ஆனந்த்தும், கார்ல்சனும் கடும் மோதலில் ஈடுபட்டனர். கார்ல்சனுடன் கடுமையாகப் போராடி டிரா கண்டு நிம்மதி அடைந்தார் ஆனந்த்.

கடும் சவால் கொடுத்த கார்ல்சன்

கடும் சவால் கொடுத்த கார்ல்சன்

முதல் சுற்று ஆட்டத்தில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் கூட பின்னர் ஆனந்த்துக்கு கடும் சவாலைக் கொடுத்தார் கார்ல்சன். இருப்பினும் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி ஆனந்த்தும் கடுமையாகப் போராடி தோல்வி என்ற அபாயத்திலிருந்து தப்பி டிராவில் முடித்து விட்டார்.

ஆனந்த்தின் ஆரம்ப உற்சாகம்

ஆனந்த்தின் ஆரம்ப உற்சாகம்

ஆரம்பத்தில் ஆனந்த்தின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் அதை விரைவிலேயே சரிப்படுத்தி விட்டார் கார்ல்சன்.

போராட வேண்டிய நிலைக்குப் போன ஆனந்த்

போராட வேண்டிய நிலைக்குப் போன ஆனந்த்

இதனால் ஆனந்த் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அடுத்த சுற்று ஆட்டத்தில் ஆனந்த் சுதாரித்து ஆட வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.

புது உற்சாகம்

புது உற்சாகம்

வெள்ளைக் காய்களுடன் ஆட்டத்தைத் தொடங்கினார் ஆனந்த். 5லமுறை உலக சாம்பியனான ஆனந்த், புது உற்சாகத்துடன் இந்தச் சுற்றைத் தொடங்கினார்.

சவால் விட்ட கார்ல்சன்

சவால் விட்ட கார்ல்சன்

ஆனால் ஆனந்த் விடுத்த சவால்களை புத்துணர்வுடன் எதிர்கொண்டார் கார்ல்சன். சடசடவென்று ஆனந்த்தின் வியூகங்களை அவர் தகர்த்தார்.

மின்னல் வேக ஆனந்த்

மின்னல் வேக ஆனந்த்

அதேசமயம், சில மின்னல் வேக நகர்வுகள் மூலம் ஆரம்பத்தில் ஆனந்த் மேலோங்கியிருந்தார். ஆனால் அதையும் கூட கார்ல்சன் புத்திசாலித்தனமாக நிறுத்தி விட்டார்.

13வது நகர்வு வரை

13வது நகர்வு வரை

13வது நகர்வு வரை ஆனந்த் அமர்க்களப்படுத்தினார். ஆனல் அதன் பின்னர் கார்ல்சன் தனது விளையாட்டைக் காட்ட ஆரம்பித்தார். 13வது நகர்வின்போது கார்ல்சன் தனது நகர்வை மேற்கொள்ள கிட்டத்தட்ட 23 நிமிடங்கள் எடுத்துக் கொண்டபோது, கார்ல்சன் தரப்பு ஆச்சரியத்தில் மூழ்கியது. ஆனால் அடுத்தடுத்த நகர்வுகளில் கார்ல்சன் சுதாரித்து விட்டார்.

48 நகர்வுகளில் டிரா

48 நகர்வுகளில் டிரா

48வது நகர்வின்போது ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த போட்டித் தொடரில் யார் முதலில் 6.5 புள்ளிகளைப் பெறுகிறாரோ அவரே சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 9, 2014, 11:48 [IST]
Other articles published on Nov 9, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+