Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெஸ்ஸி “கால்” கொடுக்க.. அர்ஜென்டினாவைக் காத்த ஏஞ்செல்…!

சாவோ பாலோ: அர்ஜென்டினாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான ரவுண்ட் 16 போட்டி படு விறுவிறுப்பாக மாறிப் போனது.

கடைசி வரை படு தைரியமாக அர்ஜென்டினாவுடன் மோதி வந்த சுவிட்சர்லாந்து, கடைசி நேரத்தில் அர்ஜென்டினா வீரர் ஏஞ்செல் டி மரியா போட்ட கோலால், தோல்வியைத் தழுவ நேரிட்டது.

மெஸ்ஸி உதவியுடன் மரியா போட்ட இந்த கோல்தான் அர்ஜென்டினாவைக் காத்து காலிறுதிக்கு இட்டுச் செல்ல உதவியது.

சுவிஸ் பிரமாதம்.. அதிர்ஷ்டம் அர்ஜென்டினாவுக்கு

சுவிஸ் பிரமாதம்.. அதிர்ஷ்டம் அர்ஜென்டினாவுக்கு

இரு அணிகளும் மிகச் சிறப்பாக ஆடின என்றால் சுவிட்சர்லாந்து அதில் சற்று பிரமாதமாகவே ஆடியது. ஆனால் அதிர்ஷ்டம் என்னவோ அர்ஜென்டினா பக்கம் இருந்ததால், கூடுதல் நேரத்தில் மரியா அபாரமான கோலைப் போட்டு அணியைக் கரை சேர்த்து விட்டார். இப்போட்டி 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவுக்குச் .சாதகமாக முடிந்தது.

கடைசி நேர பதட்டம்

கடைசி நேர பதட்டம்

ஆரம்ப கட்டங்களில் அர்ஜென்டினா சிறப்பாக ஆடத் தவறியதால் கடைசி நேரத்தில் ராமா கோவிந்தா என்ற அலற வேண்டிய நிலை ஏற்பட்டது.

மெஸ்ஸி.. மரியா

மெஸ்ஸி.. மரியா

கடைசி நேரத்தில் கூடுதல் நேரத்தில், மெஸ்ஸி அழகாக பந்தை எடுத்துக் கொடுக்க அதை மரியா சரியாக பாஸ் செய்து கோலாக்கினார்.

பெனால்டியிலிருந்து தப்பியது

பெனால்டியிலிருந்து தப்பியது

கூடுதல் நேரம் முடியப் போகும் தருவாயில் அதாவது 2 நிமிடத்திற்கு முன்புதான் இந்தக் கோலைப் போட்டது அர்ஜென்டினா என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெனால்டி ஷூட் அவுட்டுக்கான வாய்ப்பை அது தவிர்த்து விட்டது.

சுவிட்சர்லாந்து ஏமாற்றம்

சுவிட்சர்லாந்து ஏமாற்றம்

மிகச் சிறப்பாக விளையாடியும் கடைசி நேரத்தில் அர்ஜென்டினாவைக் கோலடிக்க விட்டது சுவிட்சர்லாந்து அணியினரை பெரும் சோகத்திலும், ஏமாற்றத்திலும் தள்ளி விட்டது.

சமப்படுத்தும் வாய்ப்பு

சமப்படுத்தும் வாய்ப்பு

அதேசமயம், அர்ஜென்டினாவின் கோலை சமப்படுத்தும் வாய்ப்பு கடைசி நொடியில் அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால் அதை அந்த அணி தவற விட்டு விட்டது.

விறுவிறுப்பான ஆட்டம்

விறுவிறுப்பான ஆட்டம்

முன்னதாக வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் படு உத்வேகத்துடன் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டதால் போட்டி பெரும் விறுவிறுப்பாக இருந்தது. இரு தரப்பும் ஒருவரது கோல் முயற்சிகளை மற்றவர்கள் முறியடித்ததால், அர்ஜென்டினா ரசிகர்கள் பதட்டமாகினர்.

திணறிய மெஸ்ஸி, ஹிகுயன்

திணறிய மெஸ்ஸி, ஹிகுயன்

மெஸ்ஸி, ஹிகுயன என ஸ்டார் வீரர்கள் கோலடிக்க முயன்றபோதெல்லாம் அதை சுவிட்சர்லாந்து அருமையாக தடுத்தது. அதேபோல அர்ஜென்டினாவும், சுவிஸ்ஸின் முயற்சிகளைத் தடுத்தது. போட்டி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், கூடுதல் நேரம் தரப்பட்டது.

கடைசி நேர மெஸ்ஸி மேஜிக்

கடைசி நேர மெஸ்ஸி மேஜிக்

கூடுதல் நேரத்தில் மெஸ்ஸி மேஜிக் அபாரமாக இருந்தது. பெனால்டி ஷூட் அவுட்டுக்குப் போய் விடக் கூடாது என்ற வேகத்தில் மெஸ்ஸி அணியினரை ஒருங்கிணைத்து தாக்குதல் ஆட்டத்தில் குதித்தார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. காலிறுதி வாய்ப்பும் கை கூடி வந்தது.

Story first published: Wednesday, July 2, 2014, 8:32 [IST]
Other articles published on Jul 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+