Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி வினாடிகளில் கோல்.. போர்ச்சுகல்- அமெரிக்கா இடையேயான ஆட்டம் டிரா!

அரேனா : 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கடைசி வினாடிகளில் கோல் அடித்து அமெரிக்காவுடனான ஆட்டத்தை டிரா செய்தது போர்ச்சுகல்.

பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு சாம்பியனான ஸ்பெயின் தொடக்க போட்டிகளிலேயே படுதோல்வியை சந்தித்து வெளியேறிவிட்டது. இதேபோல் இங்கிலாந்தும் வெளியேறி உள்ளது.

ரொனால்டோவுக்காக..

ரொனால்டோவுக்காக..

இந்த நிலையில் அமெரிக்காவும் போர்ச்சுகல்லும் இன்று மோதின. போர்ச்சுகல் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர் ரொனால்டோவின் பரபரப்பான ஆட்டத்துக்காக ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர்.

அசத்திய நானி..

அசத்திய நானி..

இரண்டு அணிகளுமே தொடக்கம் முதலே விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர. போர்ச்சுகலின் நானி 5வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

டெம்ப்சி போராட்டம்

டெம்ப்சி போராட்டம்

இதற்கு பதிலடி கொடுக்க போராடியது அமெரிக்கா. 27வது நிமிடத்தில் அமெரிக்காவின் டெம்ப்சி கோலடிக்க முயற்சித்துப் பார்த்தார்.ஆனால் அது நடக்கவில்லை. போர்ச்சுகல் வீரர்களால் அவரது கோல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

நானியின் தீவிரம்

நானியின் தீவிரம்

அதேபோல் 45வது நிமிடத்தில் மீண்டும் போர்ச்சுகலின் நானி கோலடிக்க முயற்சித்தார். ஆனால் அமெரிக்காவின் ஹோவர்ட் கோல் அதை லாவகமாக தடுத்தார். பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

போர்ச்சுகல் அணியில் மாற்றம்

போர்ச்சுகல் அணியில் மாற்றம்

2வது பாதியில் போர்ச்சுகல் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த அணியின் அல்மீடாவுக்கு பதிலாக வில்லியம் களமிறங்கினார்.

அமெரிக்கா விஸ்வரூபம்

அமெரிக்கா விஸ்வரூபம்

47வது நிமிடத்தில் போர்ச்சுகலின் ரோனால்டோ கோலை நோக்கி அடித்த பந்தை அமெரிக்காவின் பெஸ்லர் தடுத்தார்.

சமன் செய்த ஜோன்ஸ்

சமன் செய்த ஜோன்ஸ்

பின்னர் 64வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஜெர்மெய்ன் ஜோன்ஸ் அற்புதமான கோல் அடித்தார். இதன் மூலம் போர்ச்சுகல் மற்றும் அமெரிக்கா அணிகள் சமநிலையை எட்டின. இதனால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது.

அமெரிக்கா முன்னிலை

அமெரிக்கா முன்னிலை

ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் அமெரிக்க கேப்டன் கிளிண்ட் டெம்ப்ஸி ஒரு கோல் அடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா முன்னிலை பெற்றது.

பெரும் போராட்டம் நடத்திய போர்ச்சுகல்

பெரும் போராட்டம் நடத்திய போர்ச்சுகல்

இதனைத் தொடர்ந்து கோலடிக்க போர்ச்சுகல் பெரும் போராட்டம் நடத்தியது. 87வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த பந்தை அமெரிக்காவின் கோல் கீப்பர் ஹோவார்ட் லாவமாக தடுத்துவிட்டார்.

கூடுதல் நேரத்திலும் தடுமாறிய போர்ச்சுகல்

கூடுதல் நேரத்திலும் தடுமாறிய போர்ச்சுகல்

இரண்டாவது பாதி ஆட்டமும் முடிந்த நிலையில் 5 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் 4 நிமிடங்கள் முடிந்த நிலையிலும் கூட போர்ச்சுகல் அணி கோல் அடிக்கவில்லை.

கடைசி வினாடிகளில்...

கடைசி வினாடிகளில்...

ஆட்டம் முடிய ஒரு நிமிடம்தான் இருக்கிறது.. அதில் 30 வினாடிகள் கடந்துவிட்டன.. கடைசி 30 வினாடிகளில் போர்ச்சுகல் அணியின் வாரேலா அற்புதமாக கோல் அடிக்க போட்டி சமனில் முடிவடைந்தது.

Story first published: Monday, June 23, 2014, 10:15 [IST]
Other articles published on Jun 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+