Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்தாட்ட ரசிகர்களின் தேசியகீதமாகிவிட்டது வி ஆர் ஓன்… (ஓலா… ஓலா… ) பாடல்

ரியோடிஜெனிரா: நடப்பு உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடருக்கான அதிகாரபூர்வ பாடலான 'வி ஆர் ஒன்...ஓலா... ஓலா... ரசிகர்களின் தேசிய கீதமாக புகழ்பெற்றுவிட்டது.

பிரேசில் நாட்டில் தற்போது கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறுவதால் பிரேசில் மொழியில் ஓலா... ஓலா... ( நாம் அனைவரும் ஒன்று) என்று கூறும் வகையில் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது.

ஓலா... ஓலா... என்ற இந்த பாடலை அமெரிக்காவின் பிரபல பாடகி ஜெனிபர் லோபஸ், பாடகர் பிட்புல் மற்றும் பிரேசில் பாப் பாடகி கிளாடியா லெய்ட்டே இணைந்து, பாடியுள்ளனர்.

ஓலா… ஓலா…

ஓலா… ஓலா…

'வீ ஆர் ஒன்' என்றால் பிரேசில் மொழியில் 'ஒலா ஒலா' என்று அர்த்தமாம். இந்தப் பாடல் கடந்த மே 16ம் தேதி யுடுயூப்பில் வெளியிடப்பட்டது. இந்த நிமிடம் வரை இந்த பாடலை 8,40,27,053 ரசிகர்கள் கேட்டும், கண்டும் ரசித்துள்ளனர்.

இளமையும், கவர்ச்சியும்

இளமையும், கவர்ச்சியும்

துள்ளமும், துடிப்புமாய், டிரம்ஸ் அதிர அதிர பிரேசிலின் சம்பா நடனக்கலைஞர்கள் பின்னணியில் அழகும், கவர்ச்சியும் நிறைந்த பாடகிகள் ஜெனிபர் லோபஸ், கிளாடியா லெய்ட்டே பாட, கம்பீரமான பாடகர் பிட்புல் குரலோடு குழைந்து ஒலிக்கிறது பாடல்.

கிறங்கிய ரசிகர்கள்

கிறங்கிய ரசிகர்கள்

நள்ளிரவு தொடங்கிய உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடக்கவிழாவிலும் இந்த பாடலை அசத்தலாக பாடி பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை கிறங்கடித்தனர் இவர்கள்.

2010ல் ஷகீராவின் குரல்

2010ல் ஷகீராவின் குரல்

2010 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக பாடகி ஷகிரா பாடிய 'வகா வகா' பாடல் உலகளவில் பிரபலமானது

2014 கால்பந்து ரசிகர்களின் தேசிய கீதம்

2014 கால்பந்து ரசிகர்களின் தேசிய கீதம்

அதேபோல 2014 உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்களின் தேசிய கீதமாகிவிட்டது ‘ ஒலா ஒலா' பாடல்.

Story first published: Friday, June 13, 2014, 11:14 [IST]
Other articles published on Jun 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+