இங்கிலாந்து அணியை வீழ்த்தியது உருகுவே- 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது!
சாவ் பாவ்லோ: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் உருகுவே அணியானது, இங்கிலாந்து அணியை அபரமாக வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற குரூப் "டி" லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் உருகுவே அணிகள் விளையாடின. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உருகுவே அணி ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோல் அடித்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இதற்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி கடுமையாகப் போராடியது. இரண்டாம் பாதியில் போராடிய இங்கிலாந்து அணி 1 கோல் அடித்து உருகுவேயை சமன் செய்தது. ஆனாலும் இங்கிலாந்து வீரர்களின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

பரபரப்பான ஆட்டத்தில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் 2 ஆவது கோல் அடித்தார். இறுதியில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்தை வீழ்த்தியது.
Story first published: Friday, June 20, 2014, 9:18 [IST]
Other articles published on Jun 20, 2014


Click it and Unblock the Notifications