Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருவேளை அதிக கோல்கள் விழ “அது”தான் காரணமாக இருக்குமோ…?

ரியோ டி ஜெனீரோ: பிரேசிலில் நடந்து வரும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள சில அணிகளின் வீரர்கள், போட்டிக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறதாம்.

இதுதான் இதுவரை இல்லாத அளவுக்கு வீரர்கள் படு உற்சாகமாகவும், துடிப்போடும் விளையாடி அதிக கோல்களைக் குவிக்கக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பு இல்லாத வகையில் இந்தத் தொடரில் அதற்குள்ளாகவே 100 கோல்களைப் போட்டு விட்டன அணிகள். இதற்கு இந்த செக்ஸ் விஷயமும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிலர் ஸ்டிரிக்ட்.. சிலரோ செம ஜாலி

சிலர் ஸ்டிரிக்ட்.. சிலரோ செம ஜாலி

பெரும்பாலும் விளையாட்டுப் போட்டிகளின்போது வீரர்கள், வீராங்கனைகள் செக்ஸ் உறவில் ஈடுபடுவதை பொதுவாக அணி நிர்வாகங்கள் அனுமதிக்காது. அந்த அடிப்படையில் இந்த போட்டித் தொடரிலும் பல அணிகள் அப்படித்தான் உள்ளன. ஆனால் சில அணிகளோ வீரர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதிக்கின்றனவாம்.

இத்தாலிக்கு ஓ.கே.

இத்தாலிக்கு ஓ.கே.

இத்தாலி அணி அதில் ஒன்று. அந்த அணி வீரர்கள் தங்களது மனைவியர் மற்றும் காதலிகளுடன் உறவு வைத்துக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளதாம்.

இங்கிலாந்து போட்டிக்கு முன்பு

இங்கிலாந்து போட்டிக்கு முன்பு

இங்கிலாந்துடனான போட்டிக்கு முன்னதாக வீரர்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டுக் கொள்ளுமாறு அணி பயிற்சியாளர் மூலம் அனுமதி தரப்பட்டதாம். அப்போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வீழ்த்தியது.

இங்கிலாந்துக்கும் அனுமதி கொடுத்தும்…!

இங்கிலாந்துக்கும் அனுமதி கொடுத்தும்…!

அதேபோல இங்கிலாந்து வீரர்களுக்கும் கூட செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளதாம். ஆனால் அவர்கள் சொதப்பி விட்டனர் - விளையாட்டில்.

ஸ்பெயின்- ஜெர்மனிக்குத் தடை

ஸ்பெயின்- ஜெர்மனிக்குத் தடை

அதே சமயம், ஸ்பெயின், ஜெர்மணி அணியினர் செக்ஸ் உறவில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாம். கட்டுப்பாடுதான் அவசியம், கோல்தான் முக்கியம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

தடை இருந்தும் சாதித்த முல்லர்

தடை இருந்தும் சாதித்த முல்லர்

ஜெர்மனி அணியின் தாமஸ் முல்லர் இதுவரை 3 கோல்களைப் போட்டுள்ளார். செக்ஸுக்குத் தடை இருந்தும் கூட ஜெர்மனி வீரர்கள் கலக்க வருவது குறிப்பிடத்தக்கது.

2வது ரவுண்டு வரை கோஸ்டாரிகாவுக்குத் தடை

2வது ரவுண்டு வரை கோஸ்டாரிகாவுக்குத் தடை

கோஸ்டாரிகா அணியினருக்கு வித்தியாசமான உத்தரவைப் போட்டுள்ளனராம். அதாவது 2வது ரவுண்டுக்கு முன்னேறும் வரைக்கும் உறவுக்கு அனுமதி இல்லையாம். அதன் பிறகு உண்டாம்.

மனைவியருடன் மட்டும்…ப்ளீஸ்

மனைவியருடன் மட்டும்…ப்ளீஸ்

நைஜீரிய அணியினருக்கோ மனைவியருடன் மட்டுமே உறவு கொள்ள "பெர்மிட்" தரப்பட்டுள்ளதாம். காதலியருடன் கூடவே கூடாது என்று உத்தரவிட்டுள்ளனராம்.

கதவைப் பூட்டாம படுங்கப்பா…

கதவைப் பூட்டாம படுங்கப்பா…

பல அணியினரின் அறைகளை பயிற்சியாளர்கள் அவ்வப்போது வந்து வேவு பார்ப்பதாக கூட காமெடியாக கூறிக் கொள்கிறார்கள்.

எப்பன்னாலும் வச்சுக்கோங்க..

எப்பன்னாலும் வச்சுக்கோங்க..

இது பிரெஞ்சு ஸ்டைல். அந்த அணியினருக்கு எந்தத் தடையும் இல்லையாம். எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் உறவு கொள்ள அனுமதி தந்துள்ளனராம்.

ரிலாக்ஸ் பண்ண செக்ஸ் அவசியம்

ரிலாக்ஸ் பண்ண செக்ஸ் அவசியம்

இதுகுறித்து ஒரு டாக்டர் கூறுகையில், செக்ஸ் என்பது உடலையும், மனசையும் ரிலாக்ஸ் செய்யத்தானே தவிர அதனால் எந்தப் பாதிப்பும் வராது. குறிப்பாக விளையாடும் திறன் பாதிக்கவே பாதிக்காது. எனவே செக்ஸ் உறவில் எந்த தவறும் இல்லை என்றார்.

போஸ்னியாவுக்கு மொத்தமாக தடை

போஸ்னியாவுக்கு மொத்தமாக தடை

முதல் முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் ஆடி வெளியேறியுள்ள போஸ்னியா அணிக்கு செக்ஸ் பற்றிப் பேசவே கூடாது என்று தடை விதித்துள்ளனராம். அதேபோலத்தான் ரஷ்யா, சிலி ஆகிய அணிகளுக்கும் செக்ஸ் தடை விதித்துள்ளனர்.

தடை விதித்த அணிகள்

தடை விதித்த அணிகள்

ரஷ்யா, போஸ்னியா, சிலி, மெக்ஸிகோ ஆகியவை செக்ஸுக்குத் தடை விதித்துள்ளன.

தாராளம் காட்டும் அணிகள்

தாராளம் காட்டும் அணிகள்

ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரலியா, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, உருகுவே, இங்கிலாந்து ஆகியவை தாராளமாக வச்சுக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டியுள்ள அணிகளாகும்.

ஓகே… ஆனா..!

ஓகே… ஆனா..!

பிரான்ஸ் அணி இரவு முழுக்கக் கூடாது. டைமுக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. பிரேசில் அணி வச்சுக்கோங்க, ஆனால் அது அக்ரோபாட்டிக் செக்ஸ் ஆக இருக்க்க் கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளது.

Story first published: Tuesday, June 24, 2014, 17:56 [IST]
Other articles published on Jun 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+