For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெல்ஜியத்தின் 16 ஷாட்டுகளை, கோலாக விடாமல் பாய்ந்து தடுத்து அமெரிக்க கீப்பர் சாதனை!

By Veera Kumar

ரியோடி ஜெனிரோ: ஒரே போட்டியில் 16 முறை பந்தை கோல் கம்பத்துக்குள் செல்ல விடாமல் தடுத்த புதிய சாதனையை இன்று அதிகாலை நடந்த போட்டியில் அமெரிக்காவின் கோல் கீப்பர் டிம் ஹோவர்ட் நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் 36 ஆண்டுகால சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. இதில் சோகம் என்னவென்றால், இத்தனை பந்துகளை தடுத்தும், பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்துவிட்டது.

அமெரிக்கா தோல்வி

அமெரிக்கா தோல்வி

உலக கோப்பை கால்பந்து போட்டியின், நாக்-அவுட் சுற்றில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் அமெரிக்காவும், பெல்ஜியமும் மோதின. இந்த போட்டியில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு போகும் வாய்ப்பை இழந்தது.

டிம் ஹோவர்ட் அபாரம்

டிம் ஹோவர்ட் அபாரம்

பெல்ஜியம் அணியுடனான போட்டியில் அமெரிக்க கோல்கம்பத்தை நோக்கி 38 ஷாட்டுகள் அடிக்கப்பட்டன. அதில் 2 கோல்கள் ஆகின. 16 முறை பந்தை, கோல் கீப்பர் டிம் ஹோவர்ட் அபாரமாக தடுத்து நிறுத்தினார். பிற ஷாட்டுகள் வீணாகின.

புதிய சாதனை

புதிய சாதனை

ஒரே போட்டியில் 16 முறை கோல் கம்பத்தை நோக்கி வந்த பந்தை தடுத்து 'சேவ்' செய்தது உலக கோப்பையில், புதிய சாதனையாகும். இதன் மூலம் சுமார் முப்பத்தாறு ஆண்டு கால சாதனையை டிம் ஹோவர்ட் நிகழ்த்தியுள்ளார்.

முந்தைய சாதனை

முந்தைய சாதனை

இதற்கு முன்பு 1978ம் ஆண்டு, பெரு நாட்டு கால்பந்தாட்ட அணியின் கோல் கீப்பர் ரமோன் குயிரோகா 13 முறை பந்தை தடுத்து சாதனை நிகழ்த்தியிருந்தார். சுமார் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அதைவிட மூன்று முறை அதிகமாக பந்தை தடுத்து டிம் ஹோவர்ட் சாதனஐ நிகழ்த்தியுள்ளார்.

பெல்ஜியமும் சாதனை!

பெல்ஜியமும் சாதனை!

டிம் ஹோவர்ட் கூறியதுபோல பெல்ஜியம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க கோல்கம்பத்தை நோக்கி 38 ஷாட்டுகளை பெல்ஜியம் வீரர்கள் அடித்ததும் ஒரு சாதனையே. 1974க்கு பிறகு இத்தனை ஷாட்டுகளை எதிர் நாட்டு கோல் கம்பத்தை நோக்கி அடித்த முதல் அணி என்ற பெருமையை பெல்ஜியம் தட்டிச் சென்றுள்ளது.

Story first published: Wednesday, July 2, 2014, 14:43 [IST]
Other articles published on Jul 2, 2014
English summary
USA goalkeeper Tim Howard was the busiest goalkeeper in World Cup history on Tuesday night (Brazil time zone) as Belgium hammered at his goal but there was no way the stopper was going to be beaten. The American was forced to make 16 saves - the most in a World Cup game since records began in 1966 - and was in inspired form.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+