Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நம்பர் டூ"வாக உலகக் கோப்பை் போட்டிக்குள் காலெடுத்து வைக்கும் இந்தியா

துபாய்: உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் நம்பர் ஒன் அணியாக ஆஸ்திரேலியா கலந்து கொள்கிறது. அதேசமயம், நம்பர் 2 அணியாக இந்தியா இணைகிறது.

தர வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவே முதலிடத்தில் தொடர்கிறது. இதே அந்தஸ்துடன் அது உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலும் நுழைகிறது.

World Cup: Australia enter as No. 1, India in 2nd spot

இந்தியா இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 114 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்கா 113 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் நடந்த முத்தரப்புத் தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் தனது அடுத்த ஒரு நாள் போட்டியாக, பிப்ரவரி 15ம் தேதி நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா.

மேலும் நடப்புச் சாம்பியனாக இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா கலந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான அணிகள் தரவரிசை:

ஆஸ்திரேலியா (120)
இந்தியா (114)
தென் ஆப்பிரிக்கா (113)
இலங்கை (109)
இங்கிலாந்து (104)
நியூசிலாந்து (101)
பாகிஸ்தான் (96)
மேற்கு இந்தியத் தீவுகள் (94)
வங்கதேசம் (75)
ஜிம்பாப்வே (53)
ஆப்கானிஸ்தான் (41)
அயர்லாந்து (34)

Story first published: Wednesday, February 4, 2015, 9:21 [IST]
Other articles published on Feb 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+